This Article is From Jul 31, 2019

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா மீது சிபிஐ விசாரணைக்கு அனுமதி

பதவியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதியை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்திருப்பது இதுவே முதல் முறை. பதவியில் உள்ள நீதிபதியின் மீது இந்திய தலைமை நீதிபதியின் அனுமதியின்றி வழக்கு பதிவு செய்ய முடியாது.

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா மீது சிபிஐ விசாரணைக்கு அனுமதி

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுக்லா, ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஆதரவாக செயல்பட்டதில் குற்றவாளி என 2017 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது

New Delhi:

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.என்.சுக்லா மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய சிபிஐக்கு அனுமதியளித்துள்ளார்.

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுக்லா, ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஆதரவாக  செயல்பட்டதில் குற்றவாளி என 2017 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. பதவியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதியை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்திருப்பது இதுவே முதல் முறை. பதவியில் உள்ள  நீதிபதியின் மீது இந்திய தலைமை நீதிபதியின் அனுமதியின்றி வழக்கு பதிவு செய்ய முடியாது. 

உயர்நீதிமன்ற நீதிபதியை விசாரிக்க அனுமதி கோரி விசாரணை அமைப்பு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தது. 

நீதிபதி சுக்லாவை ராஜினாமா செய்யவோ அல்லது தானே முன்வந்து ஓய்வு பெறவோ முந்தைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கேட்டுக் கொண்டார். ஆனால் நீதிபதி சுக்லா அதை மறுத்து விட்டார். 2018இல் நீதித்துறை பணிகள் அவரிடமிருந்து  திரும்ப பெறப்பட்டன.

நீதிபதி சுக்லாவை குற்றஞ்சாட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  கடந்த மாதம் கடிதம் எழுதினார்.

2017 ஆம் ஆண்டு நீதிபதி சுக்லாவுக்கு எதிரான புகாரில், அப்போதைய தலைமை நீதிபதி மிஸ்ரா, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மாணவர்களை சேர்ப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க மருத்துவக் கல்லூரிக்கு உதவி வழங்கினாரா என்று விசாரிக்க நீதிபதிகள் குழுவை அமைத்திருந்தார். 

லக்னோவில் உள்ள ஜி.சி.ஆர்.ஜி இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் 2017-18 ஆம் ஆண்டுக்கு மாணவர்களை அனுமதிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்த சில நாட்களுக்க் பிறகு, நீதிபதி  சுக்லா தனது பெஞ்சின் உத்தரவில் பேரில் மாற்றங்களை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தரமற்ற உள்கட்டமைப்பு மற்றும் பல நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியது  குறித்த அறிக்கையின் பின்னர் மாணவர்களி சேர்க்கை அந்த மருத்துவக் கல்லூரிக்கு தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

நீதிபதி சுக்லா மீதான குற்றச்சாட்டுகளில் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதிகள் குழு முடிவு செய்தது. மேலும், அவர் “நீதித்துறை வாழ்க்கையின் மதிப்புகளை இழிவுபடுத்தியுள்ளார், ஒரு நீதிபதி தனது அலுவலகத்தின் கம்பீரத்தையும் கண்ணியத்தையும் நம்பகத்தன்மையும் குறைக்க தகுதியற்ற முறையில் செயல்பட்டார்.”  என்று  தெரிவிக்கப்பட்டது. 

.