Read in English
This Article is From Oct 20, 2018

முதன்முறையாக கர்ப்பப் பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!

கர்ப்பப் பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டப் 28 வயதுப் பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது

Advertisement
நகரங்கள்

கர்ப்பப் பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டப் 28 வயதுப் பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது

Pune:

கர்ப்பப் பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டப் 28 வயதுப் பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது. இசாதனையை செய்த மருத்துவர்கள் இச்சம்பவம் இந்தியாவில் முதல் முறை என்று கூறியுள்ளனர்.

வாடோதராவைச் சேர்ந்த மீனாட்சி வாலான் (28), கடந்த மே மாதம் 2017ல், கர்ப்பப் பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். வாலானின் கர்ப்பப் பையில் இதற்கு முன் கரு தங்காததால் அவருக்கு குழந்தை பெருவது இயலாமல் இருந்தது. வாலானின் தாயார் அவருக்கு கர்ப்பப் பை தானம் செய்ததால், (ஐ.வி.எப்) செயற்கை கருத்தரித்தல் முறையால் மீனாட்சி கருதரித்தார்.

மீனாட்சிக்கு கர்ப்பப் பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனையிலையே, அவர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவர் வார்டியி, ‘இந்த முறையில் குழந்தையைப் பெற்றெடுத்தது இந்தியாவில் மட்டுமல்லாமல், ஆசிய-பசிபிக் பகுதியிலேயே முதல் முறையாகும்' என்றார் பெருமையுடன்.

இது போன்ற மாற்று முயர்சியால் இது வரை சுவீடன் நாட்டில் ஒன்பது குழந்தைகளும், அமெரிக்காவில் இரண்டு முறையும் குழந்தைகள் பிறந்துள்ளன.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement