ஹைலைட்ஸ்
- திரைப்படத்தில் வரும் கதைப்போல, தில்லியில் காணாமல் போனச் சிறுவன் மீட்பு.
- சிறுவனின் தந்தை அவரின் நெற்றியில் உள்ள தழும்பை அடையாளம் கண்டார்
- சஞ்சயால் அச்சிறுவன் உள்ளூர் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டான்.
New Delhi:
புதுதில்லி: வடக்கு தில்லி லஹோரி கேட்டில் தன் மூன்று வயதில் காணாமல் போனச் சிறுவன் பஞ்சாப்பில் கண்டுபிடிக்கப்பட்டு ஆறு வருடங்களுக்கு பிறகு தன் குடும்பத்தோடு இனைந்ததாக தில்லி குற்றவியல் கிளை போலீசார் தெரிவித்தனர்.
அவரை மீட்பதற்கான தகவலை தெரிவிப்பவற்கு 50,000 ரூபாய் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டது என தெரிவித்தனர்.
இந்த வழக்கைப் பற்றிய விசாரணையை தில்லி உயர் நிதிமன்றம் குற்றவியல் கிளைக்கு மாற்றியது.
டி.ஆர்.பீ.யின் லஹோரி கேட் அருகில் உள்ள சேரிகளின் குடியிருப்பில் தங்கியிருந்தச் சிறுவன் 2012 மே 21 அன்று காணாமல் போனான் .
போலீஸ் துணை கமிஷனர் (குற்றம்) ஜொய் டிரிக்கி மேற்பார்வைக்கு உட்பட்ட குழுக்கள் அனைத்து திசைகளிலும் பரவி, கோரக்பாம் எக்ஸ்பிரஸ், டூஃபான் மெயில், பஞ்சாப் மெயில், ஷான்-ஏ-பஞ்சாப், ஹவுரா-தில்லி கால்கா மெயில் மற்றும் ஜம்மு மெயில் ஆகிய இரயில்களின் ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் தேடினர்.
ஜூன் 20 ம் தேதி, காணாமல் போன சிறுவன், பஞ்சாபில் உள்ள கபுர்தலா, ஹுசேன் புர்பரில் ஒரு குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அவரது தந்தை போலிஸ் குழுவுடன் சேர்ந்தார் மற்றும் சிறுவன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தத்தெடுக்கப்பட்ட அந்த குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார் என, அலோக் குமார், போலிஸ் துணை ஆணையார் (குற்றவியல்) கூறினார்.
சிறுவனின் தந்தை அவரின் நெற்றியில் உள்ள தழும்பு மற்றும் முகவடிவத்தைக் பார்த்து சிறுவனை அடையாளம் கொண்டார்.
மூன்று வயது சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினர் பல ரயில்கள் சென்றுக் கொண்டேயிருக்கும் தடத்திற்கு அருகே உள்ள புல் மிதை, பிலி கோதிக்கு அருகிலுள்ள சேரியில் வசித்து வந்தனர்.
சிறுவன் காணாமல் போனபோது பிற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். சிறுவன் ஏதேனும் ஒரு ரயில் மீது ஏறிச் சென்று எங்காவது பயணித்திருப்பார் எனச் சந்தேகிக்கப்பட்டது.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பிகாரில் உள்ள முங்கரில் வாழும் சஞ்சய்யும், அவரது மனைவியும், இரண்டு குழந்தைகளும் பீகாரில் உள்ள லாக்கி சாராயில் உள்ள ஒரு உள்ளூர் இரயில் பயணம் செய்தனர்.
கியுல் இரயில் நிலையத்தில் தனியாக பயணம் செய்த ஏழு வயதான சிறுவனை இந்த குடும்பம் கண்டது என அதிகாரித் தெரிவித்தார்.
இந்த குடும்பம் அச்சிறுவனுக்கு உணவளித்து அவனது பெற்றோரைப் பற்றி விசாரித்தனர். ஆனால் அச்சிறுவனுக்கு குடும்பத்தைப் பற்றி சொல்லத் தெரியவில்லை. இக்குடும்பம் இரயிலில் அவனது குடும்பத்தை தேடிக் களைத்துவிட்டது. அதன் பின்னர் அந்தச் சிறுவனை அவர்களுடன் அழைத்துச் சென்றனர்.
பீகாரிலிருந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்த குடும்பம் பஞ்சாபிலுள்ள கபூர்தலாவில் ஹுசைன்புராருக்குத் திரும்பியது, அங்கு சஞ்சய் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தார். அந்தச் சிறுவனின் குடும்பத்தை கண்டுபிடிக்க முயற்சித்த அந்த குடும்பத்தின் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டது. சிறுவனின் பெற்றோரைக் கண்டுபிடிக்க நாங்கள் சந்தித்த அனைவரும் உதவினர்.
இதற்கிடையில், குற்றவியல் கிளை இச்சிறுவனைப் பற்றிய அறிவிப்பு நோட்டீஸை தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களில் ஒட்டியது.
கபூர்தலாவில் உள்ள சஞ்சய் அண்டை வீட்டினர் மின்டா தேவி(55), தில்லிக்கு வருகை தந்ததிருந்தப் போது, புது தில்லி இரயில்வே நிலையத்தில் அந்தச் சிறுவனின் படத்தை கொண்ட நோட்டீஸைப் பார்த்தார் என அவர் கூறினார்.
அவர் தனது போனில் நோட்டீஸைப் புகைப்படம் எடுத்து தில்லி போலிஸாருடன் தொடர்புக் கொள்ளுமாறு சஞ்சயிடம் கேட்டுக் கொண்டார். அவர் குற்றவியல் பிரிவிற்கு தொடர்புக் கொண்டு இந்தச் சிறுவனை கண்டுபிடிக்க உதவினார்.
2012 மற்றும் 2016 க்கு இடையில் நான்கு வருட காலத்தில் நடந்த எந்தவொரு விஷயமும் அச்சிறுவன் நினைவில் இல்லை. சஞ்சயால் அச்சிறுவன் உள்ளூர் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டான்.
சிறுவனைப் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் சிறுவனை குழந்தைகள் நலக் குழுவின் முன் சமர்ப்பிப்பர்.