டிரம்ப் வருகையையொட்டி தாஜ்மஹாலின் ஒரு பகுதியைத் தூய்மைப்படுத்தும் தொழிலாளர்கள்.
Agra: அடுத்தவராம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இரண்டு நாள் இந்தியா வருகையையொட்டி ஆக்ரா நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நாட்டின் முக்கிய நதிகளின் ஒன்றான யமுனை நதியில் புதிய நீர் பாய்ச்சப்பட்டிருக்கிறது. வீதிகள் தோறும் வர்ணங்கள் பூசப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த திங்கள் அன்று அமெரிக்க அதிபரின் பாதுகாப்புக் குழு உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மஹாலைப் பார்வையிட்டனர். அதே நாளில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத் யோகியும் ஆக்ரா நகரத்திற்கு வருகைபுரிந்திருந்தார்.
ஆக்ரா விமான நிலையத்திலிருந்து தாஜ்மஹாலுக்கு இடைய உள்ள கிட்டதட்ட 13 கி.மீ சாலையில் 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்ரா, மதுரா, பிருந்தாவனத்தைச்சார்ந்த கலைஞர்கள் கலாச்சார நிகழ்ச்சிகளை நிகழ்த்துகின்றனர்.
தாங்கள் ஆக்ரா விமான நிலையத்திலிருந்து தாஜ்மஹால் வரையுள்ள சாலைகளை அகலப்படுத்துவதாகவும், அழகுபடுத்துவதாகவும் இதன் காரணமாகச் சட்டவிரோத பதுக்கல்கள் அகற்றப்படுவதாக ஆக்ரா பிரிவு ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.
A team of US security officials visited Taj Mahal on Monday.
கடந்த சில நாட்களில் உத்தரப் பிரதேச நீர்ப்பாசனத் துறையால் டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தின் உயிர்நாடியான யமுனாவில் 500 கீயூசெக் அளவிற்கும் அதிகமான நீர் வெளியிடப்பட்டிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை யமுனை நதியிலிருந்து வரும் துர்நாற்றத்தினை குறைக்கும் என உத்தரப் பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் அரவிந்த் குமார் பி.டி.ஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். உத்தரகண்ட், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசங்களின் வழியாகக் கடலில் கலக்கும் இந்த நதியானது கடந்த காலகட்டங்களில் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாசுக்கட்டுப்பாட்டினை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையானது, மதுரா மற்றும் ஆக்ராவில் உள்ள ஆற்றில் ஆக்சிசன் அளவினை மேம்படுத்தும். ஆனால், நீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்றும், துர்நாற்றம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.