Read in English
This Article is From Nov 13, 2018

பழங்கால எகிப்தியர்களின் கல்லறையில் பூனைகளின் உடல்கள் கண்டெடுப்பு!

எகிப்திய தொல்பொருள் அமைச்சரகத்தை சேர்ந்த பல உறுப்பினர்களும் இந்த கண்டுபிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டனர்.

Advertisement
உலகம் (c) 2018 The Washington Post

கடந்த சனிக்கிழமையன்று எகிப்திய தொல்பொருள் அமைச்சரகம், தங்களது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு 6,000 வருடம் பழமை வாய்ந்த நகரமான மெம்ஃபிஸ் (memphis) அருகே டஜன் கணக்கில் மம்மிஃவிகேஷன் (mummification) செய்யப்பட்ட பூனைகளும், மரத்தினால் செய்யப்பட்ட 100 பூனை சிலைகள் மற்றும் பூனைகளின் கடவுளாக பழங்காலத்தில் கருதப்பட்ட பஸ்டட் (bastet) சிலையும் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியிட்டனர்.

எகிப்திய தொல்பொருள் அமைச்சரகத்தை சேர்ந்த பல உறுப்பினர்களும் இந்த கண்டுபிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டனர்.

இச்சம்பவம் பழங்கால எகிப்தியர்கள் பூனைகளை எவ்வளவு விரும்பினார்கள் என்பதை தெரியப்படுத்துகிறது.

Advertisement

மேலும் இந்த ஆய்வால் எகிப்திற்க்கு சுற்றுலா பயணிகள் அதிகபடியாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.“அங்குள்ள கல்லறைகளை ஆராய்வதின் மூலம் எகிப்தின் வளங்கள் மற்றும் நாகரிக வளர்ச்சியை பற்றி நாம் தெரிந்துகொள்ள சான்றாக அமையும் எனவும் மீண்டும் எகிப்தில் உள்ள பழங்கால கட்டமைப்பின் பிரம்மாண்டத்தை உலகுக்கு தெரியபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழங்கால எகிப்தியர்களை புதைப்பதற்கு முன்னர் அவர்களது உடலை அடுத்த பிறவிக்கும் பயன்படுத்துவதற்கு உதவியாக ‘மம்மிஃவிகேஷன்' எனப்படும் பதப்படுத்தும் முறையை பயன்படுத்துவர்.

‘இறந்தவர்களின் செல்ல பிராணிகளையோ அல்லது அப்பிராணிகளின் சிலைகளையோ மம்மிஃவிகேஷன் செய்து புதைப்பார்கள். அக்காலக்கட்டத்தில் பூனைகளை தான் அதிக எண்ணிக்கையில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்பட்டன எனவும், அவைகளை கடவுளுக்கு பலி கொடுக்கவும் புதைப்பார்கள், அந்த விலங்குகளை கடவுளின் அவதாரமாக கூட அக்காலத்தில் கருதப்பட்டன''என தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் கைரோபைவில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் , சலிமா இக்ராம் தனது வலைப்பதிவில் கூறியுள்ளார்.

ஸ்மித்ஸோனியன் அருங்காட்சியகத்தில் பணியாற்றிய கியூரேட்டர் அன்டொனிட்டா கேட்டான்சாரிடி “ இதுவரை பலநூறு பூனைகளின் மம்மிகள் கிடைத்ததாகவும், அவைகள் ராஜாங்கத்தை பாதுகாக்கவும், புனிதத்தை பாதுகாக்கவும் கொல்லப்பட்டன '

Advertisement

இத்துடன், ஆராய்ச்சியாளர்கள் வேறு சில மிருகங்களையும் கைப்பற்றினர். அங்கு மரப் பாம்புகள், முதலைகள், வண்டுகள் என பல வகை மம்மிகள் உள்ளதாக மொஸ்தஃவ்வா வாசிரி,எகிப்திய சுப்பிரிம் ஜெனரல் தொல்பொருள் அமைச்சரகம் கூறியது.

“ இது அரியவகை கண்டெடுப்புதான், சில தினங்களுக்கு முன்னர் மூன்று சவப்பெட்டிகளில் சகாரப்பின் (scarabs) படங்கள் கண்டெடுக்கபட்டன என்றும் அதைபற்றி கேட்டதேயில்லை” என ராயிடர்ஸ் நிறுவனத்திடம் மொஸ்தஃவ்வா வாசிரி தெரிவத்தார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement