குழந்தை உயிரிழப்பிற்கு மருத்துவமனையின் அலட்சிய போக்கே காரணமென பெற்றோர் குற்றச்சாட்டு.
Patna: பீகாரின் தார்பங்க் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்து ஒன்பது நாட்களே ஆன கைக்குழந்தை எலி கடித்ததற்காக சிகிச்சை பெற தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. திங்களன்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தை இன்று காலை உயிரிழந்தது.
குழந்தையின் கை கால்களில் எலி கடித்த தடம் இருந்ததால் திங்களன்று மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம். ஆனால், அந்த நேரத்தில் மருத்துவமனையில் செவிலியர்களோ அல்லது மருத்துவர்களோ யாரும் பணியில் இல்லை. நாங்கள் உடனே மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் இதனை தெரிவித்தோம். அப்போது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக, குழந்தையின் தந்தை தெரிவித்தார்.
அம்மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவின் தலைவர் கூறுகையில், மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்ட போது குழந்தையின் உடலில் எலி கடித்ததற்கான தடயம் எதுவும் இல்லை என்று கூறினார். மாவட்ட நீதிபதி ஹரி பிரசாத்தை அணுகிய குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.