This Article is From Jun 14, 2019

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைவோம் - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி

பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதற்கு நாடுகள் அவற்றின் குறுகிய நோக்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் முன்னிலையில் மோடி கூறினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டி பிரதமர் நரேந்திர மோடி

New Delhi:

கிர்கிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அதில் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமைக்கான கொள்கைகளை குறிப்பிட்டு பேசினார். இந்தியா ஒரு பயங்கரவாத சமுதாயத்திற்கு துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதற்கு நாடுகள் அவற்றின் குறுகிய நோக்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் முன்னிலையில்  மோடி கூறினார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக மாநாடு ஒன்றினை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

இந்த மாநாட்டில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானிடம் பிரதமர் நரேந்திர மோடி நட்பு ரீதியாக கூட கை குலுக்கி நலம் விசாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.