This Article is From Sep 18, 2018

தலைமைச் செயலாளரை தாக்கிய வழக்கு: கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பிய டெல்லி நீதிமன்றம்!

3000 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal), சிசோடியா (Sisodia) மற்றும் பிறர், தலைமைச் செயலாளரை அச்சுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது

தலைமைச் செயலாளரை தாக்கிய வழக்கு: கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பிய டெல்லி நீதிமன்றம்!

கெஜ்ரிவால் (Arvind Kejriwal) உள்ளிட்டவர்களை அக்டோபர் 25-ல் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

New Delhi:

புது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal), துணை முதல்வர் மணீஷ் சிசோடியா (Manish Sisodia) உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களுக்கு, தலைமைச் செயலாளர் அனுஷ் பிரகாஷை (Anshu Prakash) தாக்கிய வழக்கில் சம்மன் அனுப்பியுள்ளது பாட்டியாலா டெல்லி நீதிமன்றம். 

இது குறித்து வரும் அக்டோபர் 25 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளது டெல்லி நீதிமன்றம். 

தலைமைச் செயலாளரை தாக்கியதாக குற்றம் சாட்டிய பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது டெல்லி காவல் துறை. அது குறித்தான குற்றப்பத்திரிகை இன்று டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3000 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், அரவிந்த் கெஜ்ரிவால், சிசோடியா மற்றும் பிறர், தலைமைச் செயலாளரை அச்சுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளித்த அனுஷ் பிரகாஷ், ‘பிப்ரவரி மாதம், இரவு டெல்லி முதல்வர் முன்னிலையில் நடந்த சந்திப்பின் போது நான் தாக்கப்பட்டேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஆம் ஆத்மி அரசு, ‘முற்றிலும் தவறான மற்றும் சிரிக்கத்தக்க வகையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மோடி அரசின் எரிச்சலையே இது காட்டுகிறது’ என்று கூறியுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிப்பார்கள்.

.