This Article is From Jul 23, 2019

சந்திராயன் 2 விண்ணில் பாய எரிபொருளாக இருந்தவர்கள் இவர்கள்தான்!

மற்ற நாடுகள் நிலவிற்கு செல்ல பில்லியன் டாலர்களில் செலவளிக்க, 140 மில்லியன் டாலர்களில் இந்த சந்திராயன் 2 மிஷனை நினைவாக்கியவர்கள் இவர்கள்தான்.

தனது வாழ்வில் 32 வருடங்களை இஸ்ரோவில் களித்த வனிதா முத்தைய்யா

Sriharikota:

சாந்திராயன் 2 கடந்த திங்கட்கிழமையன்று விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டிற்கு ராக்கெட் எரிபொருள் மற்றுமின்றி இருவர் முக்கிய எரிபொருளாக செயல்பட்டுள்ளனர். அந்த இருவரின் ஓய்வற்ற உழைப்பு, நிலவின் தரை தொடும் நான்காவது நாடாக இந்தியாவை மாற்றியுள்ளது. 

இந்தியாவில் முதன்முறையாக, ஒரு வின்வெளி பணி, ஒரு பெண்ணால் தலைமைவகிக்கப்பட்டது. இந்தியா இரண்டாவது முறையாக நிலவை காணவும் இந்த பெண்ணின் பல ஆண்டு உழைப்புதான் காரணமாக இருந்தது. அவர்தான் இந்த சந்திராயன் 2-ற்கான திட்ட இயக்குனர் வனிதா முத்தையா (Muthayya Vanitha). இந்த சந்திராயனிற்கு மற்றொரு சக்தியாக இருந்தது, பணி இயக்குனர் ரிது கரிதால் (Ritu Karidhal).

தனது வாழ்வில் 32 வருடங்களை இஸ்ரோவில் களித்த வனிதா, சென்னையின் ஒரு இஞ்சினியரிங் குடும்பத்தில் பிறந்தவர். 

g6qv1pl

இது குறித்து வனிதா கூறியது, "நான் இங்கு ஜீனியர் இஞ்சினியராக சேர்ந்தேன். என்னுடைய பணி இங்குள்ள ஆய்வகங்களில் துவங்கியது. சொதனைகளில் துவங்கிய பணி, பொருள் தயாரித்தல், வடிவமைத்தல் ஆகியவற்றை தொடர்ந்து நிர்வாக நிலையை அடைந்ததுள்ளது." என கூறியுள்ளார்.

விண்வெளி பொறியாளரான க், 22 வருடங்களாக இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் பட்டம் பெற்ற ரிது கரிதால், முன்னதாக செவ்வாய்க்கு சென்ற மங்கள்யான் திட்டத்தில் முக்கிய பொருப்பு வகித்தார். தற்போது சந்திராயன் 2 திட்டத்திற்கு பணி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
 

gkmhp95

வனிதா மற்றும் கரிதால் மட்டுமின்றி, சந்திராயன் 2 உயிர் பேற 30 சதவிகித பெண்கள், இந்த திட்டத்தில் பணியாற்றியுள்ளனர். 

"இஸ்ரோவில், ஆண் பெண் என எந்த வித்தியாசமும் இல்லை. அனைவருக்கும் சமமான பங்கு உள்ளது", என இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் கூறியுள்ளார்.

ஒரு விவசாயியின் மகனான, கே.சிவன், 2017-ல் ஒரே ராக்கெட்டில் 100 செயற்கைகோள்களை விண்ணிற்கு செலுத்தி உலக சாதனை படைத்தார். 

இந்த வெற்றிக்கு பின்னால் இவர்கள் மட்டுமின்றி இன்னும் பலர் இருக்கிறார்கள். 

குறிப்பிடத்தக்கதாக, கடந்த வாரம் எஞ்சினில் ஏற்பட்ட கோலாறை சரி செய்த திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் வின்வெளி மையத்தின் இயக்குனரான டாக்டர்.எஸ்.சோம்நாத் (Dr S Somanath)

சந்திராயன் இரண்டு முழுமை பெற காரணமாக இருந்த பி குன்ஹிகிருஷ்ணன் (P Kunhikrishnan). இவர் ஒரு ராக்கெட் பொறியியலாளர்இஞ்சினியராக தன் பயணத்தை துவங்கி செயற்கைக்கோள் தயாரிப்பாளராக மாறியுள்ளார். இஸ்ரோவின் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

mnaodfno

இந்த செயற்கைகோள் விண்ணிற்கு செல்வதற்கான திட்ட இயக்குநர் ஜே.ஜெயபிரகாஷ் மற்றும் வாகன இயக்குநர் ரகுநாத பிள்ளை- இருவரும் 
இஸ்ரோவுக்கான ராக்கெட் நிபுணர்கள்.

டாக்டர் அனில் பரத்வாஜ், 52 வயதான கிரக விஞ்ஞானி மற்றும் அகமதாபாத்தின் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் இயக்குனர். இவர் இந்தியாவின் மங்கல்யான் மிஷனில் முக்கிய உறுப்பினராக இருந்தார்.

மற்ற நாடுகள் நிலவிற்கு செல்ல பில்லியன் டாலர்களில் செலவளிக்க, 140 மில்லியன் டாலர்களில் இந்த சந்திராயன் 2 மிஷனை நினைவாக்கியவர்கள் இவர்கள்தான். இந்த மிஷன், கிட்டத்தட்ட இந்தியா நிலவிற்கு தன் முதல் செயற்கைக்கோளான சந்திராயன் 1-ஐ அனுப்பி 11 வருடங்கள் களித்து நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

.