This Article is From May 29, 2019

‘கட்சியினர் அணித் தாவல் “துப்பாக்கி முனையில்” நடந்தது’- திரிணாமூலின் ஃபேக்ட் செக்!

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தம் இருக்கும் 42 தொகுதிகளில் திரிணாமூல் 22 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும் வெற்றியடைந்துள்ளது. 

பாஜக தரப்போ, “எப்படி நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்ததோ, அதேபோல, 7 கட்டங்களில் பலர் பாஜக-வில் இணைவார்கள்” என்று சூசகமாக தெரிவித்துள்ளது. 

Kolkata:

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸில் இருந்த பலர், நேற்று பாஜக-வுக்கு கட்சித் தாவினர். இந்த கட்சித் தாவல் குறித்து திரிணாமூல் காங்கிரஸ், ஒரு ஃபேக்ட் செக் தகவலை முன் வைத்துள்ளது. அந்தத் தகவல்படி, ‘துப்பாக்கி முனையில் பலர் கட்சித் தாவலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் திரிணாமூல் தரப்பு, ‘எங்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு எம்.எல்.ஏ மற்றும் 6 கவுன்சிலர்கள் மட்டும்தான் பாஜக-வுக்குத் தாவியுள்ளனர். மற்றவர்கள் காங்கிரஸையும் சிபிஎம் கட்சியையும் சேர்ந்தவர்கள்' என்று கூறியுள்ளது. 

சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ‘உங்கள் கட்சியின் (திரிணாமூல்) 40 பிரதிநிகள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் சீக்கிரம் எங்கள் பக்கம் வருவார்கள்' என்று பகிரங்கமாக தெரிவித்தார். 

திரிணாமூலைச் சேர்ந்த சுப்ரங்ஷூ ராய் எம்.எல்.ஏ, நேற்று பாஜக-வில் இணைந்தார். அவர் பாஜக முகுல் ராயின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல சிபிஎம்-ஐச் சேர்ந்த தேபேந்திர நாத் ராய் எம்.எல்.ஏ மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த துஷார்காந்தி பட்டாச்சார்யா எம்.எல்.ஏ ஆகியோர் நேற்று பாஜக-வில் இணைந்தனர். 

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தம் இருக்கும் 42 தொகுதிகளில் திரிணாமூல் 22 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும் வெற்றியடைந்துள்ளது. 

தங்கள் கட்சியில் இருந்த 6 கவுன்சிலர்கள் மட்டும்தான் பாஜக-வில் இணைந்துள்ளதாக திரிணாமூல் கூறினாலும், சுமார் 60 கவுன்சிலர்கள் நேற்று பாஜக-வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

பாஜக தரப்போ, “எப்படி நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்ததோ, அதேபோல, 7 கட்டங்களில் பலர் பாஜக-வில் இணைவார்கள்” என்று சூசகமாக தெரிவித்துள்ளது. 

.