Read in English
This Article is From Jul 04, 2018

டெல்லிக்கு ராஜா யார்… கவர்னரா? முதல்வரா?- இன்று வெளியாகிறது பரபரப்பு தீர்ப்பு!

கடந்த டிசம்பர் மாதத்துடன் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்று காலை 10:30 மணிக்குள் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement
இந்தியா

Highlights

  • தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மத்திய அரசு ஒடுக்குகிறது, ஆம் ஆத்மி
  • டெல்லியின் துணை நிலை ஆளுநரின் பங்கு குறித்து இத்தீர்ப்பு மூலம் தெரியவரும்
  • இன்று காலை 10:30 மணியளவில் தீர்ப்பு வரலாம்
New Delhi:

இந்திய தலைநகர் புது டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பாஜக-வுக்கு அதிகாரப் பகிர்தலில் நேரடி போட்டி நிலவி வருகிறது. 

ஆம் ஆத்மி கட்சி 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் பிரதிநிதிகளின் கீழ் ஆட்சி நடத்தப் பார்க்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் பாஜக நியமித்த டெல்லியின் துணை நிலை ஆளுநர் அஜித் பைஜல், எதேச்சதிகார போக்குடன் நடந்து கொள்கிறார் என்பது குற்றச்சாட்டு. இதனால், டெல்லியில் யார் சொல்வதுபடி ஆட்சி நிர்வாகம் நடக்க வேண்டும் என்பதில் குழப்பம் நிலவி வந்தது.

இந்த விஷயம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, ஆளுநருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஆம் ஆத்மி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. கடந்த டிசம்பர் மாதத்துடன் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்று காலை 10:30 மணிக்குள் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநரின் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆம் ஆத்மி, ‘டெல்லியில் துணை நிலை ஆளுநர் நடுநிலையோடு செயல்படாமல், மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைச் செய்பவராகவே இருக்கிறார். மோடியின் நேரடி அறிவுறுத்தல் படியே ஆளுநர் பைஜல் இப்படி நடந்து கொள்கிறார்’ என்றது. மேலும், மத்திய அரசு டெல்லியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை, மாநில அரசுக்கும் அமைச்சர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டாம் என்று வற்புறுத்தியதாகவும் டெல்லி  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திடுக் புகாரை கூறினார்.

ஐஏஎஸ் அதிகாரிகளின் இந்த ‘ஸ்டிரைக்’-ஐ வாபஸ் பெற வைக்க வேண்டும் என்று கோரி, ஆளுநர் பைஜல் வீட்டில் 9 நாட்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர் ஆம் ஆத்மி கட்சியினர். 

இப்படி தொடர்ந்து மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், எதற்கும் மோடி தலைமையிலான அரசு விட்டுக் கொடுப்பதாக இல்லை.

உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் 9 மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினர். அதில் ஒருவரான ப.சிதம்பரம், ‘பிரிட்டிஷ் ராஜாங்கத்தில் வைஸ்ராய்கள் இருந்தது போல தற்போது ஆளுநர்கள் இருக்கிறார்கள்’ என்று வாதாடினார். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. 


 

Advertisement