हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 02, 2019

மழை வெள்ளத்தால் நகருக்குள் வந்த முதலை! நாயை கடிக்க முயன்று அச்சுறுத்திய காட்சி!! #Video

முதலை மொத்தம் மூன்றரை அடி நீளம் இருந்தது. அருகில் உள்ள ஆற்றில் இருந்து முதலை வந்திருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

Advertisement
விசித்திரம் Written by , Edited by

நகருக்குள் முதலை வந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது

குஜராத் மாநிலம் வடோதராவில் மழை வெள்ளத்தில் வந்த முதலை ஒன்று நாயை கடிக்க முயன்றது. இந்த வீடியோ காட்சி சமூக வலை வைரலாக பரவி வருகிறது. 

வடோதராவில் பெய்த மழையால் அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து முதலை ஒன்று ராஜ்தாம் சொசைட்டி பகுதிக்குள் வந்தது. தெருவெல்லாம் வெள்ளம் சூழ்ந்திருக்கு, முதலை படு சாதாரணமாக நீந்திக்கொண்டே தெருக்களுக்குள் ரவுண்டு அடித்தது. 
 

அந்த வீடியோ:


ஒரு சமயத்தில் 2 நாய்கள் தெருவோரத்தில் நிற்க அவற்றின் அருகே சென்று முதலை கடிக்க முயன்றது. இரை பிடிபடாததால் அந்த முதலை ஏமாற்றத்துடன் சென்றது. 
 

அந்த முதலையின் நீளம் மூன்றரை அடியாவது இருக்கும் என கணக்கிடப்பட்டது. இதுதொடர்பாக தகவல் அறிந்த வன விலங்குகள் மீட்பு அமைப்பினர், முதலையை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

குடியிருப்பு பகுதிக்கு அருகே விஷ்வாமித்ர ஆறு ஓடுகிறது. அங்கிருந்து மழை வெள்ளத்தில் முதலை ஊருக்குள் வந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

Advertisement
Advertisement