This Article is From Jul 29, 2020

ஜேசிபி - கார் மோதி கோர விபத்து... நொடிப்பொழுதில் தப்பிய பைக் ஓட்டி! வைரல் வீடியோ உள்ளே

ஜேசிபி - சொகுசு கார் மோதிய விபத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் பைக் ஓட்டி உயிர்த்தப்பினார்

ஜேசிபி - கார் மோதி கோர விபத்து... நொடிப்பொழுதில் தப்பிய பைக் ஓட்டி! வைரல் வீடியோ உள்ளே

கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிய வாகன ஓட்டி

ஹைலைட்ஸ்

  • சாலையோரத்தில் பைக்கை நிறுத்தி விட்டு நின்ற வாலிபர்
  • சாலையின் ஒரு புறம் ஜேசிபி, மறுபுறம் மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார்
  • நொடிப்பொழுதில் உயிர் தப்பிய பைக் ஓட்டி

ஜேசிபி-சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், சாலையின் ஓரமாக நின்றிருந்த பைக் ஓட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்தப்பினார்.

ஒவ்வொருவருக்கும் அதிர்ஷ்டம் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கும். பனை மரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, கல் தடுக்கி இறந்தவனும் உண்டு என்பார்கள். அப்படியான சம்பவம் ஒன்றுதான் வைரல் வீடியோவாகியுள்ளது. 

சாலையோரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு ஒருவர் ஓரமாக நின்றிருருக்கிறார். இப்படியான சூழலில் சாலையின் ஒரு புறத்தில் ஜேசிபி வண்டி வந்து கொண்டிருந்தது. திடீரென ஜேசிபி இவர் பக்கம் திரும்பியது. அப்போது அதே சமயத்தில் மஹிந்திரா பொலிரோ கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது.

இந்த இரு வாகனங்களும் பைக் ஒட்டியின் பக்கம் திரும்ப, சற்றும் எதிர்பாராத விதமாக ஜேசிபி மீது கார் மோதி, பைக்கைத் தட்டியது. கார் வந்த வேகத்தில், அதன் முன்பக்க கண்ணாடிகள் நொறுங்கிச் சிதறியது. 

இதனிடையே நடுவில் இருந்த பைக் ஓட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்தப்பினார். அவரது உடலில் எந்தக்காயங்களும் ஏற்படவில்லை. மாறாக பைக் சேதமடைந்தது. இந்த வீடியோ டுவிட்டரில் வெளியாக லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.

Click for more trending news


.