Read in English
This Article is From Aug 20, 2018

கர்ப்பிணியை மீட்ட கடற்படைக்கு “Thanks” - மாடியில் எழுதி நன்றி தெரிவித்த நெகிழ்ச்சி சம்பவம்

கேரள மாநிலம ஆலுவா பகுதியில், வெள்ளத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணிப் பெண் ஒரு ஹெலிகாப்டர் மூலம் மீட்க்கப்பட்டு, அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்

Advertisement
இந்தியா
Aluva, Kerala:

கேரள மாநிலம ஆலுவா பகுதியில், வெள்ளத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணிப் பெண் ஒரு ஹெலிகாப்டர் மூலம் மீட்க்கப்பட்டு, அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சாஜிதா ஜபில் என்ற அந்த பெண்ணை கண்டு, மீட்ட கடற்படை பைலட் காமண்டர் விஜய் வர்மா உதவினார்.

சஜிதா மீட்க்கப்பட்ட அதே மாடியில், கமாண்டர் விஜய் வர்மாவுக்கு “Thanks” என பெயின்டால் எழுதி நன்றி தெரிவித்துள்ளனர். அந்த வழியாக எந்த ஹெலிகாப்டர் சென்றாலும் இந்த நன்றி அவர்களால் பார்க்கும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.

பனிக்குடம் உடைந்த நிலையில், அவரது வீட்டின் முதல் தளம் வரை வெள்ளம் அதிகரித்ததால், வேறு வழியின்றி சிக்கித் தவித்து வந்த சஜித்தா, சரியான நேரத்தில், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மீட்கப்பட்டு 30 நிமிடங்களிலேயே நல்லபடியாக பிரசவம் நடந்தது.
 

முதலில் மருத்துவர் ஒருவர் ஹெலிகாப்டரில் அழைத்து வரப்பட்டு அவரது நிலை பரிசோதிக்கப்பட்டது. மருத்துவரின் ஒப்புதலை அடுத்து, கயிறு மூலம் ஹெலிகாப்டருக்கு தூக்கப்பட்டு பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

சில மணி நேரம் கழித்து “ தாயும் சேயும் நலம்” என கடற்படை ட்விட்டரில் படம் வெளியிட்டது, பார்ப்பவர்களை நெகிழ வைத்தது.

Advertisement