This Article is From Jan 25, 2019

கொடநாடு விவகாரம்: முதல்வரை சிபிஐ விசாரிக்க கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

கொடநாடு விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கொடநாடு விவகாரம்: முதல்வரை சிபிஐ விசாரிக்க கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

தமிழக முதல்வருக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

New Delhi:

கொடநாடு கொலை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை விசாரிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காப்பாளர் ஓம் பகதூர் கடந்த ஏப்ரல் 2017-ல் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதன் தொடர்ச்சியாக விபத்து உள்ளிட்ட சம்பவங்களில் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். 

நடந்தவை அனைத்தும் கொலைகள் என்றும் இதன் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும் தெஹல்கா புலனாய்வு இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பத்திரிகையாளர் சந்திப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு இன்றுவிசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரிக்க முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

.