This Article is From Apr 25, 2020

கட்டுப்பாடுகளை மீண்டும் தளர்த்தியது மத்திய அரசு! குடியிருப்புகளில் கடைகளை திறக்க அனுமதி

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தையும், உயிரிழப்பு 700-யையும் கடந்து விட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25-ம்தேதி தொடங்கிய ஊரடங்கு நடவடிக்கை மே 3-ம்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • கொரோனா பரவல் அதிகமுள்ள இடங்களில் கட்டுப்பாடு தளர்வு பொருந்தாது
  • பொதுப்போக்குவரத்து செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை
  • அத்தியாவசிய பொருட்களை மட்டும் வழங்க ஆன்லைன் வர்த்தகத்திற்கு அனுமதி
New Delhi:

கொரோனா பரவலை தடுப்பதற்கான ஊரடங்கு உத்தரவு அடுத்த வாரம் இறுதியுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் மத்திய அரசு மேலும் சில கட்டுப்பாடுகளை இன்று தளர்த்தியுள்ளது. இதன்படி மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் ஷாப்பிங் மால்களைத் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டுப்பாடு தளர்வு கொரோனா பாதிப்ப அதிகம் இருக்கும் ஹாட்ஸ்பாட்டுகள், தனிமைப்படுத்தப்பட்ட மண்லடங்கள் (containment zones) ஆகிய இடங்களுக்கு பொருந்தாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது. 


இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது-

மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் ஷாப்பிங் மால்களை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளை திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடு தளர்வு கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்கள், தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு பொருந்தாது.

மாஸ்க், கையுறைகள் மற்றும் சமூக விலகலை கடைக்காரர்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். பொதுப் போக்குவரத்து இயங்குவதற்கு அனுமதி கிடையாது. மாநகராட்சி எல்லைக்குள் அமைக்கப்பட்ட சந்தைகளை திறந்து கொள்ளலாம்.

Advertisement

அனைத்து உணவகங்கள், சலூன் கடைகள், மதுபான கடைகள் திறப்பதற்கு அனுமதி இல்லை. அத்தியாவசிய தேவைப் பொருட்களை விநியோகிக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 

சினிமா திரையரங்குகள், ஜிம், நீச்சல் குளங்கள், பார்கள் உள்ளிட்டவை செயல்பட அனுமதியில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இதற்கிடையே டெல்லி மற்றும் அசாம் அரசுகள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில் கடைகளை திறக்க அனுமதிக்க மாட்டோம் என அறிவித்துள்ளன. மாநிலத்தில் நிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்த ஆய்வுக் கூட்டத்தை டெல்லி அரசு இன்றும், அசாம் அரசு திங்களன்றும் நடத்தவுள்ளன. 

தமிழகத்தை பொருத்தளவில் எந்தக் கட்டுப்பாடும் தளர்த்தப்படவில்லை. மாறாக சென்னை, கோவை, மதுரை மாநகரங்களில் நாளை முதல் புதன்கிழமை வரையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது. 

Advertisement

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தையும், உயிரிழப்பு 700-யையும் கடந்து விட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25-ம்தேதி தொடங்கிய ஊரடங்கு நடவடிக்கை மே 3-ம்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Advertisement