This Article is From Feb 07, 2019

மக்களவையில் காங்கிரஸை சரமாரியாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி!

மோடி வெறுப்பு நிலைப்பாட்டில் எதிர்கட்சியினர் நாட்டையே வெறுத்து வருகின்றனர் என நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

New Delhi:

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை மீதான விவாத அமர்வு நடந்து வருகிறது. இதில் இன்று மாலை பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதலில் பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு வந்தார். காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கிய அவர், தனது அரசின் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி கொடுத்தார்.

30 வருடங்ளுக்கு பின்னர் 2014ஆம் ஆண்டு தேர்தலில் முதல்முறையாக மக்கள் தங்களது முழு ஆதரவை தந்து அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு வாக்கு இயந்திரத்தை குறை கூறுகிறது. மாநில ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் 356-வது பிரிவு 50 முறை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள், ஒரு காலமும் 356ஐ தவறாக பயன்படுத்தவில்லை.

2 சகாப்தம் முடிந்துள்ளது ஒன்று காங்கிரசுக்கு முன், வாரிசு அரசியலுக்குப்பின் நான் சொன்ன மாற்றங்கள் நடந்துள்ளது. நான் எப்போதும் உண்மையைத்தான் பேசுகிறேன். என்னை பலரும் பலவிதமாக விமர்சிக்கின்றனர். மோடி வெறுப்பு நிலைப்பாட்டில் எதிர்கட்சியினர் நாட்டையே வெறுத்து வருகின்றனர்.

நமது விமானப்படை வலுவாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி இந்திய ராணுவத்தை வெறுக்கிறது. ஆனால் நான்தான் மக்களின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்குவதாக குற்றச்சாட்டு வைக்கிறது. தேர்தல் கமிஷனை அவமதித்து பேசுகின்றனர். திட்டக்கமிஷனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஜோக்கர் என்கின்றனர்.

.