This Article is From Apr 23, 2020

மத்திய பிரதேசத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; கண்களைத் தோண்டியெடுத்துக் கொடூரம்

ஜபல்பூரில் உள்ள மருத்துவமனையில்தான் சிறுமிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மத்திய பிரதேசத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; கண்களைத் தோண்டியெடுத்துக் கொடூரம்

நேற்று மாலை தன் நண்பர்களுடன் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத நபர் சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாக போலீஸ் கூறுகிறது.

Damoh:

மத்திய பிரதேச மாநிலத்தின் தமாவ் பகுதியில் வசித்து வந்த 6 வயது சிறுமி, அவரது வீட்டுக்கு அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் அந்த சிறுமியின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. மிகவும் கவலைக்கிடமான நிலையில் அந்தச் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நேற்று மாலை தன் நண்பர்களுடன் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத நபர் சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாக போலீஸ் கூறுகிறது. அவர் அப்போதிலிருந்து காணாமல் போயுள்ளார். இன்று காலைதான் மீண்டும் அவரை கண்டுபிடித்துள்ளனர். 

“அந்தச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவர் கண்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. சந்தேகப்படக் கூடிய பலரை நாங்கள் விசாரித்து வருகிறோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்,” என்று மூத்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் சிங் சவுகான் தகவல் கூறுகிறார்.

ஜபல்பூரில் உள்ள மருத்துவமனையில்தான் சிறுமிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு சிறுமியின் குடும்பத்தோடு போலீஸ் குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸால் உலகமே முடங்கிப் போயிருக்கும் இந்தச் சூழலில், மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

.