அதிகாலையில் இருட்டாக இருந்ததால் சிறுத்தைக்குட்டி வீட்டினுள் புகுந்திருக்கலாம். (Representational Image)
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில், கொசுவலையினுள் உறங்கிய குழந்தைகளோடு சேர்ந்து மூன்று மாத சிறுத்தைக்குட்டியும் படுத்து உறங்கிய விநோத சம்பவம் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இகத்புரி தாலுகாவிலுள்ள தாமன்காவ்ன் பகுதியில் நடந்துள்ளது.
இன்று காலை 5:30 மணிக்கு தரையில் கொசுவலையினுள் படுத்து தூங்கிக்கொண்டிருந்த தனது இரண்டு குழந்தைகளுடன் ஒரு சிறுத்தைக்குட்டியும் அருகே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததைப் பார்த்த தாய் மனீஷீ பார்டே அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே நைசாக, சத்தம் போடாமலும் சிறுத்தையைத் தொந்தரவு செய்யாமலும் இரண்டு குழந்தைகளையும் வலையில் இருந்து வெளியே எடுத்துள்ளார். அதன்பின்னரே அக்கம்பக்கத்தினர்க்குத் தகவல் அளித்துள்ளார்.
'அதிகாலையில் இருட்டாக இருந்ததால் திறந்திருந்த கதவின் வழியாக சிறுத்தைக்குட்டி வீட்டினுள் புகுந்திருக்கலாம்' என்று இச்சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரி ஜாதவ் தெரிவித்தார்.
வனத்துறையினரால் மனீஷா பார்டேவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சிறுத்தைக்குட்டி தற்போது அவர்களது உள்ளூர் அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. முறைப்படி விரைவில் அது காட்டிலேயே விடப்படும்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more
trending news