This Article is From Nov 11, 2018

ம.பி.யில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!

’ராஜ்ய கர்மாச்சரி சயன் ஆயோக்’எனப்படும் தேர்வாணையங்களில் ஒழிவுமறைவின்மை திட்டம் நடைமுறைக் கொண்டு வரப்படும் என்று கூறினர்

ம.பி.யில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!

போபாலில் காங்கிரஸ் 112 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

Bhopal:

வியாபம் ஊழலால் பாதிப்படைந்தவர்களுக்கு அவர்கள் தேர்வுக்கு செலுத்திய தொகை திருப்பி வழக்கப்படும் என்று காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. வியாபம் என அறியப்படும் மத்திய பிரதேச தொழில்முறை தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட போட்டி தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகள் சிபிஐ-யால் விசாரணை செய்யப்பட்டுவருகிறது.

112 பக்க தேர்தல் அறிக்கையை போபாலில் வெளியிட்டு பேசிய எதிர்கட்சியினர், மத்திய பிரதேசத்தில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், 'ராஜ்ய கர்மாச்சரி சயன் ஆயோக்'எனப்படும் தேர்வாணையங்களில் ஒழிவுமறைவின்மை திட்டம் நடைமுறைக் கொண்டு வரப்படும் என்று கூறினர்.

மத்திய பிரதேசத்தில் அரசு பணி மற்றும் மருத்துவ தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வுகள் வியாபம் நடத்தி வந்தது. போபாலில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை வஜன் பத்ரா என தலைப்பிடப்பட்டிருந்தது. அதில் மூன்றாம் பாலினத்தாருக்கான குழு மற்றும் கொள்கை அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பனிரெண்டாம் வகுப்பில் 70 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு லேப்டாப் மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இலவச இருசக்கர வாகனம் வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது.

மக்களுக்கு வீட்டுரிமை ஏழைகளுக்கு 35 கி.கி கோதுமை மற்றும் ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்க இருப்பதாகாவும் உறுதி அளித்துள்ளது.

இந்த தேர்தல் அறிக்கை காங்கிரஸ் தலைவர் கமல் நாத், மாநில தேர்தல் பிரச்சார கமிட்டி தலைவர் ஜோதிர ஆதித்யா சிந்தியா மற்றும் முன்னாள் முதலமைச்சர் திக்விஜயா சிங் முன்னிலையில் வெளியிடப்பட்டது. நவம்பர் 28ஆம் தேதி தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11 ஆம் தேதி வெளியிடப்படும்.
 

.