Read in English
This Article is From Oct 23, 2018

மும்பையில் மட்டும் 5 ஆண்டுகளில் நடந்த ரயில் விபத்துகளில் 18,400 பேர் பலி

ரயிலில் இருந்து விழுந்தது, கம்பம் மீது ரயில் மோதியது, ரயில்வே பாதையை கடக்கும்போது நடந்த விபத்து உள்ளிட்டவற்றில் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

Advertisement
Mumbai

2013-18 ஆண்டுகளில் ரயில் விபத்தில் 18-ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Mumbai:

மும்பையில் ரயில் விபத்துகளில் உயிரிழந்தோர் தொடர்பான விவரங்கள் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளன. இங்கு கடந்த 2013 ஜனவரி முதல் 2018 ஆகஸ்ட் மாதம் வரை நடந்த ரயில் விபத்துகள் தொடர்பான விவரங்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக சகீல் அகமது என்பவர் தகவல் கேட்டுள்ளார்.

இதற்கு ரயில்வே அளித்துள்ள விவரம்-

ரயிலில் இருந்து தவறுதலாக விழுந்தது, கம்பங்கள் மீது மோதியது, ரயில் பாதைகளை கடக்கும்போது ரயில் மோதியது, ரயிலின் கூரையில் பயணம் செய்யும்போது விழுந்தது உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

Advertisement

அந்த வகையில் 2013-ல் 3506 பேர் உயிரிழந்துள்ளனர். 2014-ல் இந்த எண்ணிக்கை 3,423-ஆக உயர்ந்துள்ளது. 2015-ல் 3304 பேரும் 2016-ல் 3202 பேரும் உயிரிழந்தனர்.

2017-ல் 3,014 பேர் உயிரிழந்தனர். நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் வரைக்கும் ரயில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,974- ஆக உள்ளது.

Advertisement

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், விபத்துகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. வேலிகள் அமைத்தல், கண்காணிப்பு பணிகள், பயணிகளுக்கு கவுன்சிலிங் அளித்த உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement