This Article is From May 29, 2020

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 22 பேர் உயரிழப்பு!

அதேபோல், நேற்று ஒரே நாளில் வைரஸ் பாதித்த 639 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,548 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Edited by

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 22 பேர் உயரிழப்பு!

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 22 பேர் உயரிழந்துள்ளனர். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,466 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நாளொன்றுக்கு 7,000ஐ கடக்காத கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது முதல் முறையாக 7 ஆயிரத்தினை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 89,987 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 71,105 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,706 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 175 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு, நேற்று ஒரே நாளில் மட்டும் 827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் 19,372 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

இதில் சென்னையில் தான் அதிகபட்ச பாதிப்புகள் தினமும் ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டுமே 14 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், நேற்று ஒரே நாளில் வைரஸ் பாதித்த 639 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,548 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதமானது மிகக் குறைவாக இருந்து வந்த நிலையில், சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 22 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

Advertisement