கடந்த விசாரணையில் பிரசாந்த் பூஷண் தனது ட்வீட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்
New Delhi: சமீபத்தில் வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டு அவர் குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆயினும், பூஷன் தன்னுடைய தவற்றுக்கு மன்னிப்பு கேட்பாரெனில் அவரை வழக்கிலிருந்து விடுக்க நீதிமன்றம் முன்வந்தது. அதன்படி மூன்று நாட்கள் கால அவகாசமும் அவருக்கு வழங்கப்பட்டது.
ஆனால், பூஷன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் எனவே மன்னிப்பு கோரப்போவதில்லையென்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர், எச்சரிக்கையுடன் மன்னித்துவிடலாம் என கூறியிருந்தார்.
இந்த சூழலில் நாளை பூஷன் தண்டனை விவரத்தினை நீதிமன்றம் அறிவிக்க இருக்கின்றது. முன்னதாக "நீங்கள் ஒருவரை காயப்படுத்துகிறீர்கள் என்றால், மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு?" நீதிபதி அருண் மிஸ்ரா பூஷனிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.
நீதிமன்ற அவமதிப்பு குறித்த விசாரணை முடிந்து தீர்ப்பு வெளிவந்த நிலையில், பூஷன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமென நீதிமன்றம் எதிர்பார்த்திருந்தது. ஆனால், அவர் வழக்கிற்கு காரணமாக இருந்த தன்னுடைய டிவிட் குறித்து விரிவாக விளக்கி, மன்னிப்பு கோருவதை நிராகரித்திருந்தார். அதன் பின்னர் அவருடைய நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளவே நீதிமன்றம் அவருக்கு மூன்று நாட்கள் அவகாசத்தினை அளித்திருந்தது.
பூஷன் தரப்பு வழக்கறிஞரான ராஜீவ் தவான், நீதிமன்றத்தை விமர்சிப்பதற்கான தார்மீக உரிமை குறித்து வாதிட்டிருந்தார். மேலும், கண்டிக்கத்தக்க மன்னிப்பை நீதிமன்றம் வழங்குவதையும் அவர் விமர்சித்திருந்தார். மேலும், கண்டிப்பு அல்லா வெறுமென மன்னிப்பு மட்டுமே போதுமானது என தவான் முன்மொழிந்துள்ளார். எவரையும் முழுமையாக, கருத்து சுதந்திரம் அற்றவராக மாற்றிவிட முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.