This Article is From May 29, 2019

ராஜினாமா முடிவில் பிடிவாதம்: ராகுலிடம் ஷீலா தீட்சித் சமாதான முயற்சி!

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

ராகுலின் ராஜினாமாவை காங்கிரஸ் ஏற்காது என ஷீலா தீட்சித் என்டிடிவியிடம் கூறியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • தலைவர் பதவியை ராஜினாமா செய்வதில் ராகுல் பிடிவாதமாக உள்ளார்.
  • நாங்கள் ஒருபோதும் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
  • மற்ற கட்சித் தலைவர்களுடன் இன்று ராகுலை ஷீலா சந்திக்க உள்ளார்.
New Delhi:

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் டெல்லியில் உள்ள ராகுல் வீட்டில் நேரில் சென்று அவரை சந்திக்க உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் 3 முறை முதல்வராக இருந்தவர் ஷீலா தீட்சித், மற்ற காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் இன்று மாலை ராகுலை சந்திக்க உள்ளார். பதவியை ராஜினாமா செய்வதில் ராகுல் பிடிவாதமாக உள்ளார். ஆனால், நாங்கள் அவரது ராஜினாமாவை ஏற்க மாட்டோம். அவர் தேர்தலுக்காக நன்கு வேலைகள் செய்துள்ளார். 
வெற்றியும், தோல்வியும் வாழ்வில் ஒரு அங்கம் தான். அதை விட முக்கியமானது தொடர்ந்து போராடுவதே என்று ஷீலா கூறியுள்ளார். டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் ஷீலாவும் போட்டியிட்டு தோல்வியுற்றார். 

நாம் தோல்வியுற்றுள்ளோம், அந்த தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசித்து வருகிறோம். நிச்சயம் தவறுகளை சரிசெய்வோம். இந்திராவின் தலைமையில் இருந்தபோதும் நாம் தோல்விகளை சந்தித்துள்ளோம். கட்சி நர்வாகிகளுடன் இன்று ராகுலை சந்தித்து சமாதானம் செய்ய உள்ளேன் என்று காந்தி குடும்பத்திற்கு நெருக்கமாக இருக்கும் ஷீலா தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று, தான் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், அவரது ராஜினாமாவை காரிய கமிட்டி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், ராகுல் தனது ராஜினாமா செய்வதான முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க அவர் கட்சிக்கு கால அவகாசம் கொடுத்தாகவும் தெரிகிறது. ராகுலின் இந்த முடிவுக்கு அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை ஏற்கும் மனநிலையில் காங்கிரஸின் முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது. 

அவர்கள், தொடர்ந்து ராகுலை போன் மூலம் தொடர்பு கொண்டு, ‘முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்' என்று வலியுறுத்தி வருகிறார்களாம். ‘ராஜினாமா செய்ய வேண்டாம். ஆனால், கட்சியில் பல விஷயங்களை மாற்றியமைக்கலாம்' என்றும் அவர்கள் அறிவுரையும் கூறியுள்ளார்களாம்.

இதேபோல், காரிய கமிட்டி கூட்டத்தின் போது ராகுல், காந்தி குடும்பத்தில் இருந்துதான் தலைவராக ஒருவர் வர வேண்டும் என்று அவசியமில்லை என்று பேசியிருக்கிறார். காங்கிரஸ் நிர்வாகிகள், பிரியங்காவின் பெயரை முன்மொழிந்துள்ளனர். அதனால் ராகுல், தன் சகோதரி, தாயாரை இதற்குள் இழுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியதாக கூறப்படுகிறது.

.