மர்மமான முறையில் மயில்கள் உயிரிழந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
Nagaur: ராஜஸ்தான் நாக்பூர் மாவட்டத்தில் 85க்கும் மேற்பட்ட மயில்கள் மர்ம மான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக உள்ளூர் மக்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், காலை 9 மணி அளவில் தான் இந்த சம்பவம் எங்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, உள்ளூர் கால்நடை மருத்துவமனை அனுகினோம், அவர் 6 மயில்களை காப்பாற்றியதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததாகவும், தகவல் தெரிவத்து 2 மணி நேரம் கழித்தே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
எனினும், இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த வனத்துறை அதிகாரிகள், தங்களுக்கு 12 மணி அளவிலே தகவல் கிடைத்தாகவும், இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அப்போது, பல மயில்கள் உயிரிழந்து கிடந்தன. ஒரு சில மயில்கள் காயமடைந்திருந்தன. இதையடுத்து, காயமடைந்த மயில்களை மட்டும் நாங்கள் மருத்துவமனைக்கு எடுத்துசென்றோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, மர்மமான முறையில் மயில்கள் உயிரிழந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.