New Delhi: புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு, மே 21 ஆம் தேதி சென்னையை அடுத்த ஶ்ரீபெரும்பத்தூரில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட், ரவிச்சந்திரன், ஜெயகுமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் உடல்நலம், மனநிலை, ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவர்களை விடுதலை செய்ய வேண்டி தமிழக அரசு கோரிக்கை வைத்தது. தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது. எனினும், தமிழக அரசின் மனுவை ரத்து செய்து. குற்றம்சாட்டப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவளான், கடந்த ஆகஸ்டு மாதம் 10 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது மத்திய அரசு என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால், 7 பேரையும் விடுவிப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது
மேலும், அக்டோபர் மாதம், இந்த வழக்கு விசாரணை நடைப்பெறும் என்று உச்ச் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.