சுற்றுலாப் பயணியைத் தாக்குவதற்கு சீறி வரும் காட்டெருது
அமெரிக்காவில் யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில், காட்டெருதுவிடம் சிக்கிய சுற்றுலாப் பெண், சாமர்த்தியமாக உயிர்பிழைத்த சம்பவம் வைரலாகியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் சுற்றுலா வந்துள்ளார். அப்போது காட்டெருதுகள் புல் மேய்ந்துக் கொண்டிருந்தன. அவற்றை அருகில் சென்று பார்க்கும் ஆர்வத்தில், அந்தப் பெண் பாதுகாவலவர்களின் அறிவுறுத்தல்களையும் மீறி காட்டெருதுகளை நெருங்கினார்.
சுற்றுலாப் பெண்னைப் பார்த்த ஒரு காட்டெருது மிரண்டெழுந்து தாக்குவதற்கு ஒடி வந்தது. இதனைச் சற்றும் எதிர்பாராத அந்தப் பெண் தலைத்தெறிக்க ஓடினார். ஆனால், இரண்டே அடியில் கல் தடுக்கி கீழே விழுந்தார்.
மீண்டு எழுவதற்குள்ளாக சுற்றுலாப் பயணிக்கு அருகில் காட்டெருது வந்துவிட்டது. இதை உணர்ந்து கொண்ட அந்தப் பெண், உடனே சுதாரித்துக் கொண்டு உயிரிழந்தது போல் நடித்தார். அவரைச் சுற்றிச் சுற்றி வந்த காட்டெருது, லேசாக அந்தப் பெண்னை நகற்றிப் பார்த்தது. இருப்பினும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அப்படியே படுத்துக்கிடந்தார்.
சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்த பூங்கா ஊழியர் காட்டெருதை விரட்டினார். காட்டெருது அங்கிருந்து நகர்ந்து சென்றதும், அந்தப் பெண் சர்வ சாதாரணமாக நடந்து வந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்கில் தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோ:
காட்டெருதிடம் இருந்து சுற்றுலாப் பயணி சாமர்த்தியமாக தப்பிக்கும் இந்த வீடியோ, யூடியூப்பில் சுமார் 1.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன.
Click for more
trending news