This Article is From May 07, 2020

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை வானிலை மண்டலத்திற்குள் கொண்டு வந்தது இந்தியா!!

ஜம்மு காஷ்மீர், லடாக்கின் வடக்கு பகுதியான கில்ஜித் - பல்திஸ்தான் மற்றும் முசாபராத் ஆகிய பகுதிகள் இந்திய வானிலை ஆய்வு மண்டலத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் சிலவற்றை பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்ரிமித்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை வானிலை மண்டலத்திற்குள் கொண்டு வந்தது இந்தியா!!

பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான நடவடிக்கை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

New Delhi:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்திய வானிலை ஆய்வு மையம் வானிலை மண்டலத்திற்குள் கொண்டு வந்தது. இது பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான நடவடிக்கை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஜம்மு காஷ்மீர், லடாக்கின் வடக்கு பகுதியான கில்ஜித் - பல்திஸ்தான் மற்றும் முசாபராத் ஆகிய பகுதிகள் இந்திய வானிலை ஆய்வு மண்டலத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் சிலவற்றை பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்ரிமித்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 5-ம்தேதி முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வானிலை ஆய்வு மையத்தின் உயர் அதிகாரி குல்தீப் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் மொகபத்ரா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நிலவும் வானிலை குறித்து கடந்த ஆகஸ்ட் முதல் அறிக்கை வெளியிடப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தற்போது இந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வானிலை நிலவரங்களை ஜம்மு காஷ்மீர் பிரிவு கையாளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வடமேற்கு மண்டலத்தில், ஜம்மு காஷ்மீர், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, சண்டிகர், அரியானா, பஞ்சாப், கிழக்கு உத்தர பிரதேசம், மேற்கு உத்தரப்பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு ராஜஸ்தான் ஆகிய உதவி மண்டலங்கள் உள்ளன. 

இந்த நடவடிக்கை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மத்திய அரசு தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. 

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.