This Article is From Jun 19, 2019

பிரதமர் மோடி தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தை மம்தா புறக்கணிக்க முடிவு!

பிரதமர் மோடி தலைமையில், ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து விவாதிக்கு இன்று அனைத்துக் கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரேசகர ராவ் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.

ஹைலைட்ஸ்

  • ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.
  • முடிவுகள் எடுப்பதற்கு ஒரு நாள் பேச்சுவார்த்தை என்பது போதாது.
  • பெரும்பாலான கட்சிகள் இதுவரை இதனை பெரும்பாலான கட்சிகள் ஏற்கவில்லை.
Kolkata:

பிரதமர் மோடி தலைமையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து விவாதிக்கு இன்று அனைத்துக் கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 5வது பொதுக்கூட்டம் டெல்லி ராஷ்டிரபதி பவனில் கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாக கூட்டணி அரசு 2-வது முறையாக பதவியேற்ற பிறகு, முதல்முறையாக நிதி ஆயோக் கூட்டமாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளவில்லை. மேலும், மாநிலத்திற்கு எந்த நிதி பலனையும் நிதி ஆயோக் தராததால், கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோல், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் இந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார்.

பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள மம்தா பானர்ஜி, நிதி ஆயோக் கூட்டத்தில் குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே பேச அனுமதிக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது என குற்றம்சாட்டினார்.

இதேபோல், பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், இந்த நிதி ஆயோக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கும் அனைத்து மாநிலங்களின் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இதற்கு பலர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இது போல் ஒரே நேரத்தில் இரு தேர்தல்களும் நடத்தப்பட்டால் பண விரயம் தவிர்க்கப்படும். அரசு அதிகாரிகள், ஆசிரியர்களை அவ்வப்போது தேர்தல் பணிக்கு அமர்த்தும் நிலையும் அவர்களுக்கு தேர்தல் பணி ஊதியம் கொடுக்கும் குறைக்கப்படும். தேர்தல் நேரங்களில் அவ்வப்போது பாதுகாப்பு அதிகாரிகளை பயன்படுத்துவதை தவிர்க்க முடியும்.

அடிக்கடி தேர்தல் வருகிறபோது நடத்தை விதிகளை அமல்படுத்துவதால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகிறது. அது இது போன்று ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் பாதிக்கப்படாது உள்ளிட்ட காரணங்கள் மத்திய அரசு சார்பில் முன்வைக்கப்படுகின்றன.

.