This Article is From Nov 16, 2018

தேர்வுக்காக விமானங்களை ரத்து செய்த தென் கொரியா அரசு

மாணவர்களுக்கு கவனச்சிதற‌ல் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும் எல்லாவற்றையும் அகற்ற உத்தரவிட்டனர்

தேர்வுக்காக விமானங்களை ரத்து செய்த தென் கொரியா அரசு

தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்கள்

Seoul:

தென் கொரியாவை சேர்ந்த மாணவர்களுக்கு மிக முக்கியமான பல்கலைகழக தேர்வு நடப்பதால் மாணவர்களின் கவனம் சிதறாமல் இருபதற்க்காக அங்குள்ள அதிகாரிகள் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

பொதுவாகவே தென்கொரிய மக்களுக்கு கல்விக்கு அதிக முக்கியதுவம் கொடுப்பதுண்டு. மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் படிப்புக்கு அரசாங்காமமும் பல நல்ல திட்டங்களை தந்துள்ளது.

இந்நிலையில் 5,95,000 மாணவர்கள் எதிர்கொள்ளும் இத்தேர்வு சுமார் 9 மணிநேரம் நடக்கும் என அந்நாட்டு கல்வி அமைச்சரகம் தெரிவித்துள்ள நிலையில் தென் கொரியாவின் குடியரசு தலைவரான மூன் ஜெயின் அரசு பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில் இந்த தகவலை தொடர்ந்து அவர் மாணவர்களுக்கு தனது வாழ்த்தை அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.

அதில் ‘ உங்களது நீண்டநாள் உழைப்பு தற்போது பலன்தர உள்ளது, அதன் மீது நம்பிக்கை வைத்து இத்தேர்வில் உங்களது முழு ஈடுபாட்டையும் செலுத்தி வெற்றி பெறுங்கள்' என அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார். பல மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் இத்தேர்வை நடத்த நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்ககளை அரசு தரப்பில் எடுத்துள்ளனர்.

மாணவர்களுக்கு கவனச்சிதற‌ல் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும் எல்லாவற்றையும் அகற்ற உத்தரவிட்டனர்.

தேர்வு நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, அலுவலகங்கள், விற்பனை மையங்கள், பங்குசந்தைகள் என அனைத்து இடங்களுமே 1 மணிநேரம் தாமதமாக செயல்பட உத்திரவிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் உரிய சமையத்தில் தேர்வு எழுத முடியும் என எதிர்பார்க்கப்படிகிறது.

இதை மீறி சாலை நெரிசலில் மாணவர்கள் சிக்கிக்கொண்டால் அவர்களுக்கு உடனடியாக உதவ போலீஸ் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வான்வழிபோக்குவரத்தால் ஏற்படும் அதிகளவு சத்ததால் இங்கலிஷ் லிசனிங் டெஸ்ட் (English listening test) எனப்படும் கேட்கும் தேர்வு நடப்பதால் தென்கொரியா விமான நிலையத்தில் உள்ள விமான சேவைகள் 25 நிமிடங்கள் நிறுத்தப்பட உள்ளது. மேலும் 134 விமானங்களுக்கு மட்டும் அனுமதி கிடைத்துள்ளதால் அந்த விமானங்களும் 3000 அடிக்கு மேல் பறந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
எல்லாவித மின் உபகரணங்களுக்கும் தடை உள்ள நிலையில் மாணவர்களுக்கு காற்று மாசினால் அவதிபடாமல் இருக்க மாஸ்க்கை மட்டும் அனுமதித்துள்ளது.

இத்தேர்வின் முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.

.