This Article is From Sep 09, 2018

ஸ்டெர்லைட் விவகாரம்: மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மத்திய நிலத்தடி நீர் வாரிய அறிக்கையை தமிழக அரசு நிராகரித்து கடிதம் எழுதியுள்ளது

ஸ்டெர்லைட் விவகாரம்: மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம்
Chennai:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மத்திய நிலத்தடி நீர் வாரிய அறிக்கையை தமிழக அரசு நிராகரித்து கடிதம் எழுதியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் மாசால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைவதாக கூறி கடந்த மே மாதம் போராட்டம் நடைப்பெற்றது. ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி நடைப்பெற்ற போராட்டத்தை தொடர்ந்து, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஆய்வறிக்கை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவதாக உள்ளது போன்று தோற்றமளிப்பதாக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை செயலாளருக்கு அவர் எழுதியுள்ள கடித்தத்தில், அறிவியல் ஆராய்ச்சிப்படி ஆலையில் இருந்து வெளியேறும் மாசால் மக்களின் உடல்நிலை பாதிப்படைகின்றது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்ததால் தான், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தூத்துக்குடியில் தற்போதுதான் அமைதி நிலை திரும்பி உள்ள நிலையில், மத்திய நீர்வளத்துறையின் இந்த ஆய்வால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஆய்வறிக்கையை திரும்ப பெற வேண்டும் எனவும் கடிதத்தில் எழுதியுள்ளார்.

.