நீட் தேர்வு தோல்விக்குப் பின்னர் பிரதீபா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது
ஹைலைட்ஸ்
- சென்ற ஆண்டு அனிதா என்கின்ற தமிழக மாணவி தற்கொலை செய்து கொண்டார்
- அதேபோல், நீட் தேர்வு தோல்வி காரணமாக பிரதீபா தற்கொலை செய்துள்ளார்
- நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானது
Chennai: 2018 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வில் தகுதி பெறாததால் தமிழக மாணவரி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா. இவர் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்தார். அதில் 1200 மதிப்பெண்களுக்கு 1125 எடுத்திருந்தார். இதையடுத்து மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வை எழுதியுள்ளார். இதையடுத்து, நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் பிரதீபா தேர்ச்சி பெறவில்லை. இதனால், மன விரக்தியடைந்த பிரதீபா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதீபா பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 12 ஆம் வகுப்பில் 98 சதவிகித மதிப்பெண்கள் எடுத்த பிரதீபா, நீட் தேர்வில் தோல்வி கண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திரு உள்ளது.
பிரதீபாவின் மரணம் குறித்து, `நீட் தேர்வில் தோல்வியடைந்த பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிய வந்துள்ளது. மற்றபடி எந்த வித புகாரும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை' என்று தெரிவித்துள்ளது தமிழக போலீஸ்.
கடந்த ஆண்டு, அனிதா என்றொரு 12 ஆம் வகுப்பு மாணவி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டும் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டது மீண்டும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலையை உருவாக்க வாய்ப்புள்ளது. இதனால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு, தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வுக்கு தனியாக பயிற்சி எடுத்துக் கொண்டால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை இருக்கிறது. மிகவும் வசதி பெற்ற நகரத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த பயிற்சி சுலபமாக கிடைக்கின்றது. அதே நேரத்தில், கிராமப் பின்புலத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இந்த பயிற்சி கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத அரசு சார்பிலேயே இந்த ஆண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இருந்தும் தேர்ச்சி சதவிகிதம் குறைந்துள்ளது.