This Article is From Jun 11, 2019

''அடுத்த 6 மாதங்களுக்கு பழைய பஸ்பாஸ் செல்லுபடியாகும்'' - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த 3-ம்தேதி முதல் பள்ளி தொடங்கியது.

''அடுத்த 6 மாதங்களுக்கு பழைய பஸ்பாஸ் செல்லுபடியாகும்'' - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

டிசம்பர் வரை பழைய பஸ்பாஸ் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 6 மாதங்களுக்கு பழைய பஸ்பாஸை பயன்படுத்தி பள்ளி மாணவர்கள் பயணம் செல்லலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் குறிப்பிட்ட சில வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வுகள் முடிக்கப்பட்டன. மாணவர்களுக்கு  ஜூன் 3-ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 

கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் பள்ளி திறப்பதை தள்ளிப்போட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இருப்பினும், அறிவித்தபடியே ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. 

பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் மாணவர்களுக்கு பஸ்பாஸ் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பழைய பஸ்பாஸை பயன்படுத்தி மாணவர்கள் பயணம் செல்லலாம் என்று கூறினார். 

டிசம்பர் மாதம் வரைக்கும் பழைய பஸ்பாஸ் செல்லுபடியாகும் என்று தெரிவித்த அமைச்சர், அதன் பின்னர் புதிய பஸ்பாஸ்கள் வழங்கப்படும் என்றார்.

.