This Article is From Apr 12, 2019

தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அடைப்பு! குடிமகன்கள் அதிர்ச்சி!!

தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

Advertisement
தமிழ்நாடு Written by

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 4 நாட்களுக்கு அடைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபானப் பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

மக்களவை தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதத்தை உயர்த்துவதற்கு தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது விடுமுறை அறிவிப்பு, விஐபிக்கள் பிரசாரம், ட்ரெண்டிங்கான விளம்பரங்கள் என தேர்தல் ஆணையம் பல முயற்சிகளை எடுத்துள்ளது. 

இந்த நிலையில், மேலும் ஒரு முக்கிய நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகள் வரும் 16 செவ்வாய், 17 புதன், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 18 வியாழன் நள்ளிரவு வரை அடைக்கப்பட்டிருக்கும்.

இதேபோன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும். இந்த நாட்களில் மதுபான ஆலையில் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், கடைகளுக்கு கொண்டு செல்லுதல் போன்ற எந்தவொரு பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 

Advertisement

தொடர்ந்து 3 நாட்கள் என மொத்தம் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருக்கு என்ற அறிவிப்பு மதுபான பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

Advertisement