இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது,
குமரி கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
சென்னையில், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். சென்னையில் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகும். வடகிழக்கு பருவ காற்று லேசாக தீவிரம் அடைந்துள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக வால்பாறையில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சங்கரன்கோயில், நாங்குநேரி பகுதியில் தலா 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.