வணிக வளாகத்தில், திமிங்கல தொட்டிக்கு மேல் இருந்த பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது கால் இடறி தொட்டிக்குள் விழுந்தார்.
திமிங்கலங்களுக்கு உணவு அளிக்கும் நேரத்தில், தொட்டிக்குள் ஒரு பெண் விழுந்தததை விளக்கும் வீடியோ, அதிர்ச்சியில் உறையவைக்கிறது. நல்ல வேளையாக, அப்பெண் எந்தவித காயமுமின்றி மீட்கப்பட்டார். இச்சம்பவம். ஜியாசிங் பகுதியில் உள்ள வியுயூ பிளாசாவில் அக்.15ஆம் தேதி நிகழ்ந்துள்ளது.
சீன சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், வணிக வளாகத்தில் பணிபுரியும் பெண் மீட்டிங்கிற்கு செல்வதற்காக வேகமாக சென்ற போது திமிங்கல தொட்டி திறந்திருந்ததை கவனிக்காமல் உள்ளே விழுகிறார். இரண்டு நிமிடத்திற்கு தொட்டிக்குள் நீந்திய அப்பெண்ணை அங்குள்ள பாதுகாப்பு ஊழியர்கள் மீட்பது தெளிவாக பதிவாகியுள்ளது.
வணிக வளாகத்தின் செய்தி தொடர்பாளர், நியூயார்க் போஸ்டிற்கு அளித்த பேட்டியில். திமிங்கலங்களுக்கு உணவு கொடுக்கும் போது அவ்வழியாக மற்றவர்கள் செல்ல அனுமதி இல்லை. மீட்டிங்கிற்கு செல்ல நேரமாகியதால் அப்பெண் அந்த வழியை பயன்படுத்தி சென்ற போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அவர் கூறினார். மேலும், எந்தவித காயமுமின்றி அவர் உடனே மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
Click for more
trending news