This Article is From Sep 20, 2019

P Chidambaram-க்குப் பிறகு சிறைக்கு வந்த 2 விஐபி-க்கள்- என்ன நடக்கிறது திகாரில்..?

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், திகார் சிறை எண்.7 இல் அடைக்கப்பட்டுள்ளார்

P Chidambaram-க்குப் பிறகு சிறைக்கு வந்த 2 விஐபி-க்கள்- என்ன நடக்கிறது திகாரில்..?

பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள கர்நாடக காங்கிரஸின் முக்கியப்புள்ளி டி.கே.சிவக்குமார் சிதம்பரம் இருக்கும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

New Delhi:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், திகார் சிறை எண்.7 இல் அடைக்கப்பட்டுள்ளார். பொருளாதாரக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை இங்கு அடைப்பதுதான் வழக்கம். அதன்படி, பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள கர்நாடக காங்கிரஸின் முக்கியப்புள்ளி டி.கே.சிவக்குமார் சிதம்பரம் இருக்கும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைத் தவிர்த்து பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் உறவினர் ராதுல் புரியும் சிதம்பரம் இருக்கும் சிறை எண் 7-இல் அடைக்கப்பட்டு உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

அகஸ்டா வெஸ்ட்லேண்டு ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை செய்யப்பட்டு வருகிறார் ராதுல் புரி. சிதம்பரத்தைப் போல அவருக்கும் நீதிமன்றக் காவல் விதித்துள்ளது நீதிமன்றம். 

கடந்த 2017 ஆகஸ்டில் சிவகுமாருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதில் கணக்கில் வராத ரூ. 300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா என்பது பீட்டர் மற்றும் இந்திரானி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனம். இந்த இருவரும் மகள் ஷீனாபோரா கொலை வழக்கில் சிறையில் உள்ளார்கள். இந்த இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
 

.