Read in English
This Article is From Jun 18, 2018

மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவு : மக்கள் பீதி!

ஸ்டெர்லைட் ஆலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கந்தக அமிலதட்டின் அளவை, தீயணைப்பு படை அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர். 

Advertisement
இந்தியா ,

Reports of sulphuric acid leaking from the Sterlite plant in Tamil Nadu's Tuticorin

Highlights

  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த மாதம் மூடப்பட்டது
  • ஆலையிலிருந்து ஏற்பட்டுள்ள கந்தக அமில கசிவால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
  • கந்தக அமிலதட்டின் அளவை தீயணைப்பு படை அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர்
Tuticorin, Tamil Nadu: 100 நாட்கள் மக்கள் போராட்டத்திற்கு பின், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த மாதம் மூடப்பட்டது. இந்நிலையில், ஆலையிலிருந்து ஏற்பட்டுள்ள கந்தக அமில கசிவால் அக்கம் பக்கத்திலுள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். கந்தக அமில கசிவு குறித்து வந்த செய்தியால், இன்று (திங்கட்கிழமை) காலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த சில அதிகாரிகள் ஆலையை பார்வையிட்டுள்ளனர்.

ஒரு சேமிப்பு தொட்டியில் இருந்து இந்த கசிவு ஏற்பட்டிருப்பதை அறிந்த அதிகாரிகள், தீயணைப்பு துறையினரின் உதவியோடு அதை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். 

"நாங்கள் எந்த அசம்பாவத்திற்கும் இடம் கொடுக்க விரும்பவில்லை. உடனடியாக கசிவு ஏற்பட்ட சேமிப்பு தொட்டியை, கிடங்கில் இருந்து அகற்றும் பணிகளை தொடங்கியுள்ளோம். எல்லா தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளையும் முறையாக பின்பற்றி வருகிறோம்" என NDTV நிருபரிடம் கூறினார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி. 

Advertisement
ஸ்டெர்லைட் ஆலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கந்தக அமிலதட்டின் அளவை, தீயணைப்பு படை அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர். 

மிக அதிகமாக அரிக்கக்கூடிய இரசாயனமான கந்தக அமிலம், உர உற்பத்தியாளர்களின் மூலப்பொருளாக இருந்து வருகிறது. 

Advertisement
இது குறித்து அறிக்கை விடுத்துள்ள வேதாந்தா நிறுவனம், "முறையான பராமரிப்பு பணிகள் ஏதும் நடக்காவிட்டால், இது போன்ற அமில கசிவு ஏற்படத்தான் செய்யும். சில பணியாளர்களையும், குறைந்தபட்ச மின்சார வசதியையும் மட்டும் எங்களுக்கு வழங்கி அனுமதித்தால், ஆலைக்கான பாதுகாப்பு பணிகளை அவ்வப்பொழுது செய்கிறோம் என தமிழக அரசிடம் கேட்டிருக்கிறோம்" என கூறியுள்ளனர்
Advertisement