ஜெய்ஷ் இ முகமது தலைமையகத்தைக் கைப்பற்றியதாக பாகிஸ்தான் அறிவித்தது.
ஹைலைட்ஸ்
- புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது
- மசூத் அசார் பாகிஸ்தானில் சுதந்திராமாக சுற்றிவருவதாக தகவல்
- கைப்பற்றியது தீவிரவாத அமைப்பின் தலைமையகம் இல்லை என பாகிஸ்தான் அறிவிப்பு
Lahore: ஜெய்ஷ் இ முகமது இயக்கத் தலைமையகத்தை கைப்பற்றிவிட்டதாக அறித்த பாகிஸ்தான், தற்போது அந்த இடத்திற்கும் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கும் தொடர்பில்லை என அறிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது.
புல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதோடு பயங்கரவாதத்துக்கும் பயங்கர வாதிகளுக்கும் பாகிஸ்தான் ஆதரவளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றன. ஐநா பாதுகாப்பு சபையும் இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது
இதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் நடந்த தேசிய பாதுாப்புக்குழுக் கூட்டத்தில், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூரில் செயல்படும் ஜெய்ஷ் - இ- முகமது அமைப்பின் தலைமையகத்தையும் பாகிஸ்தான் அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் பாவாத் செளத்ரி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது செளத்ரி கூறும்போது, அது மதரஸா ஆகும். ஜெய்ஷ்-இ-முகமது தலைமையிடம் என இந்தியா கூறுகிறது. லாகூரில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள பஹவல்பூரில் ஜெய்ஷ் - இ- முகமது அமைப்பின் தலைமையகம் செயல்படுவதாக முதல்முறையாக கடந்த வெள்ளியன்று பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுது.
பின்னர், செய்தியாளர்கள் அங்கு சென்று விசாரித்த போது, பஹவால்பூர் கட்டட வளாகத்தில் மசூதியும் மதராஸாவும் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழைகளுக்கு மத மற்றும் உலகக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது என்றும் இதற்கும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தனர்.
இதேபோல், போலீசாரும் அங்கு 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் அவர்களுக்கு தீவிரவாத அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லை என்றனர்.