This Article is From Sep 10, 2018

நாள் முழுவதும் வாட்ஸப்பில் இருந்த பெண்ணின் திருமணம் நின்றது – உ.பி.யில் சுவாரஸ்யம்

ரூ.65 லட்சம் தந்தால் தான் வாட்ஸப் பெண்ணை மணப்பேன் என்கிறார் மணமகன்

நாள் முழுவதும் வாட்ஸப்பில் இருந்த பெண்ணின் திருமணம் நின்றது – உ.பி.யில் சுவாரஸ்யம்

மணகன் கமர் ஹைதரை படத்தில் காணலாம்

Amroha, Uttar Pradesh:

அம்ரோஹா, உத்திரப்பிரதேசம்: நாள் முழுவதும் மணப்பெண் வாட்ஸப்பில் இருப்பதாக கூறி அவரை மணமுடிக்க மணமகன் மறுப்புத் தெரிவித்துள்ளார். பெண் வீட்டார் ரூ. 65 லட்சம் தந்தால் தான் அவரை மணமுடிப்பேன் என்கிறார் இந்த மணமகன். இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் நடந்துள்ளது.

செப்டம்பர் 5-ந்தேதி மணமகளின் வீட்டில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தன. அப்போது, பெண் வீட்டார் மணமகனை எதிர்பார்த்து காத்திருந்தனர். மாலை வரை யாரும் வரவில்லை. இதையடுத்து, மணமகனை நேரில் சென்று விசாரித்தபோது, அவர் சொல்லியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “மணமகளின் கேரக்டர் சரியில்லை. எப்போதும் வாட்ஸப் சாட்டிங் செய்கிறார். எனவே மணம் முடிக்க முடியாது“ என்று மணமகன் கமர் கூறியுள்ளார்.

பின்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், ரூ. 65 லட்சம் தந்தால், நான் திருமணம் செய்துக் கொள்கிறேன் என மணமகன் கூறியதாக, மணப்பெண் வீட்டார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, மணமகனின் மீது மணப்பெண்ணின் தந்தை போலீசில்புகார் அளித்துள்ளார்.

.