Uttarkashi: உத்தரகாண்ட் மாநிலத்தில் கோயிலில் பூசாரிக்கு சம்பளம் கொடுக்காததால் பூசாரி உண்டியலை நிர்வாகத்திற்கு கொடுக்காமல் துணியைப் போட்டு மூடி வைத்துள்ளனர்.
உத்தரகாண்ட்டில் உள்ள உத்தரகாசி என்ற மிகவும் பிரபலமான யமுனோதிரி கோயில் பூசாரிகள் சம்பளம் கிடைக்காத காரணத்தால் கோயில் உண்டியலை கைப்பற்றி வைத்துள்ளனர்.
“எங்களுக்கு ஊதியம் கிடைக்க வேண்டும் இல்லையென்றால் உண்டியல் வசூலிலிருந்து ஒரு சதவீதத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
உண்டியலை துணி போட்டு கைப்பற்றி வைத்துள்ள தகவல் அறிந்ததும் துணை பிரிவு மாஜிஸ்திரேட் கோவிலுக்கு உயர் பாதுகாப்பு படையினை அனுப்பியுள்ளார்.
நிர்வாக அதிகாரி அனுராக் ஆர்யா “தகவல் கிடைத்ததும் கோயிலுக்கு தக்க பாதுகாப்பினை ஏற்படுத்தியுள்ளோம். சில புகைப்படங்கள் உண்டியலில் துணி போட்டு கைப்பற்றி வைத்திருப்பதை பார்க்க முடிந்தது. சம்பந்தப்பட்ட பூசாரிகளின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.