This Article is From Dec 19, 2019

கர்நாடகாவில் போராட்டத்தை கலைக்க துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட போலீசார்! - வீடியோ

தொடர் போராட்டம் காரணமாக மாவட்டத்தில் 5 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Mangaluru (Karnataka):

கர்நாடகாவின் மங்களூர் மாவட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்..

நாடுமுழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் வலுத்து வரும் நிலையில், மங்களூரு மாவட்டத்தில் 5 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

முன்னதாக நேற்று மாலை முதல் கர்நாடகா மாநிலம் முழுவதும் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறும் நிலையில், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, என்டிடிக்கு கிடைத்த வீடியோவில், போராட்டம் நடந்த பகுதியில் 4 போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனை சிலர் தொலைவில் இருந்த படி பார்வையிடுகின்றனர். அந்த பகுதியில் அதிக அளவில் போராட்டக்காரர்கள் குவிந்ததை தொடர்ந்து அவர்களை கலைக்க போலீசார் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இதேபோல், மாநிலத்தின் பிற பகுதிகளான ஹூப்பாலி, கலாபுர்க்கி, ஹாசன், மைசூரு, பல்லாரி மற்றும் மாநில தலைநகரான பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த போராட்டங்களை கலைத்த போலீசார் நூற்றக்கும் மேலானவர்களை கைது செய்துள்ளனர். 


 

.