This Article is From Jun 09, 2019

ராகுல் காந்தி பிறந்த போது உடனிருந்த செவிலியர் - நெகிழ்வான சந்திப்பு

நேற்று மொத்தம் 6 இடங்களில் அவர் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான மக்கள் நின்று தங்கள் புதிய எம்.பி.யை வரவேற்றனர்

ராகுல் காந்தி பிறந்த போது உடனிருந்த செவிலியர் - நெகிழ்வான சந்திப்பு

ஜுன் 19 தேதியுடன் ராகுல் காந்திக்கு 49 வயது முடிவடைகிறது.

New Delhi:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக கேரள மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான வயநாடுக்கு வந்துள்ளார். முதல் நாளில் பல்வேறு பகுதிகளுக்கு பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். 2வது நாளான நேற்று காலை வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு  வந்தார்.

இதற்கிடையில் தான் பிறந்தபோது நர்ஸாக பணிபுரிந்த ராஜம்மா ராஜப்பனை சந்தித்து மனம் நெகிழ பேசியுள்ள புகைப்படங்கள் ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ வயநாடு ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜுன் 19 ராகுல் காந்திக்கு 49 வயது முடிவடைகிறது.

மூன்று நாள் பயணத்தில் ராகுல் காந்தியை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் ராகுல் காந்தியை விவசாயிகள், பழங்குடியினர் என பல்வேறு பிரிவினர் சந்தித்து தங்கள் குறைகளை தெரிவித்தனர். ஏராளமான மக்கள் ராகுல் காந்தியை சந்தித்து தங்கள் கோரிக்கையை கூறினார்கள். சிலர் மனுக்களும் கொடுத்தனர். நேற்று மொத்தம் 6 இடங்களில் அவர் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான மக்கள் நின்று தங்கள் புதிய எம்.பி.யை வரவேற்றனர்.

வெள்ளிக்கிழமை ரோட்டோரக் கடைகளில் உணவினை சாப்பிட்டு உள்ளூர்காரர்களுடன் பேசிச் சென்றார்.

கோழிக்கோட்டில், ராஜம்மா என்ற ஓய்வு பெற்ற பெண் நர்சை நேரில் சந்தித்து பேசினார்.  ராகுல் காந்தி பிறந்தபொழுது நர்சாக பணியாற்றிய அவரிடம், பழைய நினைவுகளை பற்றி பேசினார்.  ராகுல் காந்தி தனது 3வது நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

.