The two men were charged under forgery for purpose of cheating according to Anti-Corruption board (File)
ஹைலைட்ஸ்
- 2007 - 2008ம் ஆண்டு நிதி ஊழல் நடந்திருக்கிறது
- சி.பி.ஐ நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது
- அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது
Hyderabad:
ஐதராபத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரி ஒருவருக்கு, நிதி மோசடி வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2007 -08 காலத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஹனுமந்தைய்யா என்ற அதிகாரிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், இந்திய தண்டனைச் சட்டத்தின் படி சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனந்த் ரெட்டி என்ற மற்றொருவருக்கு இந்திய தண்டனைச் சட்டம் ஐ.பி.சி 648-ன் படி 5 ஆண்டுகள் சிறையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.பி.சி 120 - பி படி 3 ஆண்டுகள் சிறையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.