This Article is From Jan 22, 2020

வரி ஏய்ப்பு புகார்:வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது 5 அதிகாரிகள் முதல் அதிகபட்சம் 10 அதிகாரிகள் வரை சுமார் 200 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு சோதனை நீடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement
தமிழ்நாடு Written by

வரி ஏய்ப்பு புகாரின்பேரில் வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான சுமார் 50-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனையை நடத்தினர். இந்த சோதனை இன்னும் 2 நாட்களுக்கு நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை அண்ணா நகரை தலைமையிடமாக கொண்ட வேலம்மாள் கல்வி குழுமம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களை அமைத்துள்ளது. 

சென்னை, மதுரை, தேனி, கரூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த குழுமத்திற்கு பள்ளிகளும், கல்லூரிகளும் உள்ளன. குறிப்பாக மதுரை ரிங் ரோட்டில் வேலம்மாள் மருத்துவமனை அமைந்துள்ளது. இதேபோன்று நீட் பயிற்சி மையங்களும் இந்த குழுமம் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. 

Advertisement

இந்த நிலையில், வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, இன்று திடீரென வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான சுமார் 50-க்கும் அதிகமான இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 

ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது 5 அதிகாரிகள் முதல் அதிகபட்சம் 10 அதிகாரிகள் வரை சுமார் 200 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு சோதனை நீடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement
Advertisement