ங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக பதவி வகித்தவர் பரமேஸ்வரா.
Bengaluru: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் கர்நாடக துணை முதல்வருமான பரமேஸ்வராவுக்கு சொந்தமான இடங்களிலும், அவரது நெருங்கிய வட்டாரங்கள் உட்பட அவருக்கு தொடர்புடைய பல இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவுக்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவருடன் தொடர்புடைய அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரி குழுமங்களில் முறைகேடுகள் நடந்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்ததுள்ளது. இந்த குழுமங்களில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கைகாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பரமேஸ்வரா அளித்த பேட்டியில், இந்த சோதனை குறித்து எனக்கு எந்த தகவலும் தெரியாது. அவர்கள் எங்கு சோதனை நடத்துகின்றனர் என்பதும் எனக்கும் தெரியாது. அவர்கள் சோதனை செய்யட்டும், அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அப்படி எங்களது தரப்பில் ஏதேனும் தவறுகள் இருந்தால், நாங்கள் அதனை சரி செய்வோம். என்று அவர் கூறியுள்ளார்.
இந்த வருமானவரித்துறை சோதனை குறித்து முன்னாள் கர்நாடாக முதல்வர் சித்தராமையா தனது ட்வீட்டர் பதிவில் கூறும்போது, பரமேஸ்வரா, ஜாலாப்பா உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருவது உள்நோக்கத்துடன் கூடிய அரசியல் காரணமே என்று அவர் கூறியுள்ளார்.
கர்நாடகா சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக சட்டனமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்று மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பரமேஸ்வரா துணை முதல்வராக இருந்தவர் ஆவார்.