சில நிறுவனங்கள், வருமானத்துக்கு ஏற்ப வரி கட்டவில்லை என்று தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- சென்னையில் 70 இடங்களில் ரெய்டு நடந்து வருவதாக தகவல்
- கோவையில் 2 இடங்களில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது
- 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளார்களாம்
சென்னை மற்றும் கோவை நகரங்களில் உள்ள 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல் வந்துள்ளது.
இரு நகரங்களில் இருக்கும் துணிக் கடைகள், நகைக் கடைகள் மற்றும் உணவகங்களில் இந்த ரெய்டு நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. பல நிறுவனங்களுக்குச் சொந்தமான கடைகளில் சோதனை நடத்தி வரும் வருமான வரித் துறையினர், வருமான வரித் தாக்கல் குறித்தான ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
அதில் சில நிறுவனங்கள், வருமானத்துக்கு ஏற்ப வரி கட்டவில்லை என்று தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
300-க்கும் அதிகமான வருமான வரித் துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் இந்த ரெய்டின் போது கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து சோதனை முடிவில் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.