Viral: இந்தப் படத்தைப் பார்த்த ஒருவர், முகநூல் பக்கத்தில், “நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். சோ ஸ்வீட்” என்று எழுதியுள்ளார்.
சில மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையிலான உறவு நெகிழ்ச்சியானது. அவற்றை வார்த்தைகளால் அளவிட முடியாது. சமீபத்தில் மனிதக் குரங்கு ஒன்று, ஆற்றில் சிக்கித் தவித்த நபரைக் காப்பாற்ற உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்த சம்பவம் குறித்தான புகைப்படம் தற்போது வெளியாகி பார்ப்போரை உருகவைத்துள்ளது. போர்னியோவில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் இந்தப் படம் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
போர்னியோவில் இருக்கும் ஆற்றில் விஷப் பாம்புகளைத் தேடும் பணியில் ஒரு நபர் ஈடுபட்டுள்ளார். நதிக்குப் பக்கத்தில் இருக்கும் குரங்குகளைப் பாதுகாக்க அவர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக ஆற்றில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்துதான் அவருக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளது குரங்கு.
டெய்லி மெயில் அளிக்கும் தகவல்படி, இந்தப் படம் அனில் பிரபாகர் என்பவரால் எடுக்கப்பட்டது எனத் தெரிகிறது.
இந்தப் படத்தைப் பார்த்த ஒருவர், முகநூல் பக்கத்தில், “நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். சோ ஸ்வீட்” என்று எழுதியுள்ளார்.
இன்னொருவரோ, “இது மெய்சிலிர்க்க வைக்கிறது. மனதைத் தொட்டுவிட்டது,” என்று குமுறுகிறார்.
இந்தப் படத்தில் மனிதக் குரங்கு உதவிக்கு கரத்தை நீட்டினாலும், அதை அந்த நபர் பிடிக்கவில்லை என்று அனில் பிரபாகர் தெரிவிக்கிறார்.
பிரபாகர், “அந்த நபரிடம் ஏன் நீங்கள் உங்கள் கையை கொடுக்கவில்லை,” என்றேன். “அதற்கு அவர், அது ஒரு காட்டு விலங்கு. நமக்குத் தெரியாத காட்டு விலங்கு என்று பதில் அளித்தார்” என்கிறார்.
Click for more
trending news