This Article is From Aug 15, 2019

‘தடையில்லா வளர்ச்சிப் பாதையில் இந்தியா; முன்னேற்றமே எங்கள் இலக்கு!’ : மோடி

21-ம் நூற்றாண்டுக்கான இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.

‘தடையில்லா வளர்ச்சிப் பாதையில் இந்தியா; முன்னேற்றமே எங்கள் இலக்கு!’ : மோடி

தொடர்ந்து 6-வது முறையாக சுதந்திர தின உரையாற்றிருக்கிறார் மோடி.

New Delhi: 21-ம் நூற்றாண்டுக்கான இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார். வளர்ச்சிக்கு இருந்த தடைகளை கடந்த 10 வாரகால ஆட்சியில் நீக்கியிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். மத்தியில் பாஜக தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது. காஷ்மீர் விவகாரம், முத்தலாக் பிரச்னை, நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றியது என அதிரடி நடவடிக்கைகளுக்கு பின்னர் மோடி இன்று சுதந்திர தின உரையாற்றினார். இதனால் அவர் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்பட்டது. மோடியின் சுதந்திர தின உரையின் 5 முக்கிய அம்சங்கள்:

Here are the top 5 quotes from PM Modi's Independence Day address

  1. இன்று கொண்டாட்ட நிகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதேநேரம் நாட்டின் சில பகுதிகள் கனமழை, வெள்ளத்தால் பரிதவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு மீட்பு படையினர் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

  2. நாட்டின் சுதந்திரத்திற்காக ஏராளமானோர் தங்களது உயிர்களை தியாகம் செய்திருக்கின்றனர். அவர்களுக்கு மரியாதை செலுத்திக்கொள்கிறேன்.

  3. எங்கள் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசின் நிர்வாக அமைப்புகளை வலிமைப்படுத்தி வருகிறோம். இதன் மூலம் நாடு விரைவான வளர்ச்சியை காண முடியும்.

  4. இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து கடந்த 10 வாரங்களில் மிக முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். குறிப்பாக காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கம், முத்தலாக் தடை உள்ளிட்டவற்றை செய்துள்ளோம்.

  5. இந்தியாவை 21-ம் நூற்றாண்டுக்கானதாக நவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு. அதை நோக்கி நாங்கள் விரைவாக செல்கிறோம்.



Post a comment
.