This Article is From Aug 15, 2020

ஒவ்வொரு சுதந்திர தினத்திற்கு முன்பும் ஆனந்த் மஹிந்திரா பார்க்கும் வீடியோ!

ஒவ்வொரு சுதந்திர தினத்திற்கு முன்னரும் இந்த வீடியோவைத் தவறாமல் பார்த்து வருகிறேன் - ஆனந்த் மஹிந்திரா

ஒவ்வொரு சுதந்திர தினத்திற்கு முன்பும் ஆனந்த் மஹிந்திரா பார்க்கும் வீடியோ!

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள சிறுவனின் வீடியோ

இந்தியாவின் 74வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தேசிய கீதம் பாடும் சிறுவனின் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. 

நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றினார். தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார்.

கொரோனா வைரஸ் பரவல் இருக்கும் நிலையிலும், நாட்டு மக்கள் சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்களது சமூக வலைதளங்களில் சுதந்திர தின வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும், சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், தேசிய கீதம் பாடும் சிறுவனின் வீடியோ ஒன்றையும் பதிவிட்டு, இந்த வீடியோவை சுதந்திர தினத்தன்று தவறாமல் பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் தேசிய கீதத்தை தேசிய பற்றுடன் பாடுகிறான். சிறுவனின் உச்சரிப்பு சரியில்லை என்றாலும், அவனது ஆர்வமும், அப்பாவித்தனமும் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

 

ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட டுவிட்டில், 'சுமார் ஒரு வருடம் அல்லது அதற்கு முன்பு இந்த வீடியோவை முதன்முதலாகப் பார்த்தேன். அப்போதே இதை பதிவு செய்து விட்டேன். அன்றிலிருந்து ஒவ்வொரு சுதந்திர தினத்திற்கு முன்னரும் இந்த வீடியோவைத் தவறாமல் பார்த்து வருகிறேன். சிறந்த இசைக்கலைஞர்களால் உருவான நமது கீதத்தின் விளக்காட்சியைப் போலவே இந்த சிறுவனின் வீடியோவும் என்னை நகர்த்துகிறது. அவனது அப்பாவித்தனமும், தேசியப்பற்றும் ஒவ்வொரு முறையும் என்னை ஈர்க்கிறது'. இவ்வாறு தெரிவித்துள்ளார்

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த இந்த வீடியோ டுவிட்டரில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீடுவிட் செய்துள்ளனர். 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்று வைரலாகி வருகிறது.

கர்நாடகாவில் பிளாஸ்டிக் இல்லாமல், விதைகள் மூலம் செய்யப்பட்ட பேப்பரில் ஒருவர் தேசியக்கொடி பேட்ஜ் உருவாக்கியுள்ளார். இந்த செய்தியும் சுதந்திர தினத்தன்று வைரலாகியுள்ளது.

Click for more trending news


.